வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (4)

அவர் பெயர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர்.  அவரோடு ஒருமுறை மாசாணி அம்மன் கோவில் போயிருந்தேன்.  கூட பிரகாஷும் வந்திருந்தார்.  நாங்கள் மூன்று பேர் சென்று வந்தோம்.  அதற்கு சில தினங்கள் முன்பு கரூரில் நான் நண்பர்களைச் சந்தித்த போது மகேஷையும் வரச் சொல்லியிருந்தேன்.  மதியம் வந்தவர் இரவு வரை இருந்து விட்டுப் போனார்.  அப்போது ஒரு விஷயம் நடந்தது.  மதிய உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லியிருந்தோம். என் அறையில் என்னோடு இருந்தது பத்து … Read more

வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (3)

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்  நமக்குப் பிரியமான ஒரு எழுத்தாளனை சந்திக்கப் போகும் போது இப்படித்தான் போவதா?  என் எழுத்துதான் உங்களுக்கு அப்படிப்பட்ட அராஜகமான மனோபாவத்தை அளிக்கிறதா?  சுதந்திரம் என்றால் மற்றவனின் கழுத்தை அறுப்பதா?  இதைத்தான் நீங்கள் என் எழுத்தில் கற்றீர்களா?  சரி, நான் கூறு கெட்டுப் போய் இப்படிச் செய்திருந்தேன் என்றால் தலைமறைவாக ஓடி விடாமல் செல்வாவை சந்தித்து வட்ட நிதிக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து ஏதோ ஒரு கைமாறாவது செய்திருப்பேன்.  அதுவும் கிடையாது.  … Read more

வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள் பற்றி (2)

ஒருவழியாக வராந்தாவில் நின்றபடி, தொலைவில் அல்லாடிக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அழைத்தேன்.  ராஜன், அறையின் உள்ளே நுழைந்ததும், முதலில் சாருவை அடையாளம் கண்டு கொண்டார்.  வந்தவருக்கு வயது ஐம்பதை நெருங்கியிருக்கும் என்று தோன்றியது.  அவர் நிறை போதையில் இருந்தார். கையில் புகைந்து கொண்டிருத்த சிகரட்டில் புகையிலை மட்டுமில்லை.  வேறு வஸ்துகளும் இருந்தன.  “ஆமா சார்… கஞ்சா… அம்பது ரூவா வித்துக்கிட்டு இருந்தது… இங்கே ஐநூறு சொல்றான்”  என்றார்.  தொடர்ந்து…“நான் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நண்பன்.  பதினைந்து வருடமாக அவருடன் எனக்கு … Read more

மதுரை சந்திப்பு – செல்வகுமாரின் ஒரு சிறுகதை

வரும் 25, 26 தேதிகளில் மதுரையில் இருப்பேன்.  விருப்பப்படும் வாசகர்கள் எனக்கு மெயில் எழுதி விட்டு என்னை சந்திக்கலாம்.  ஆனால் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது.   என்ன பிரச்சினை என்றால், புதிதாக சந்திக்கும் நண்பர்கள் எப்போதுமே தொந்தரவு தருபவர்களாக இருக்கிறார்கள்.  சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு வாசகர் சந்திப்பு நடந்தது.  அதற்கு புதிதாக ஒரு நண்பர் வருவதாக ஆர்வம் காட்டினார்.  வயது கிட்டத்தட்ட 50 இருக்கலாம்.  ஏற்கனவே மகாபலிபுரத்தில் நடந்த வாசகர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு என்னிடம் … Read more

ஒரு விபரீதம்

சென்னை புத்தகக் கண்காட்சியை நான் ஒரு தமாஷாகவே நினைக்கிறேன்.  காரணம் என்ன என்பது பற்றி பலமுறை விளக்கி எழுதி விட்டேன்.  அங்கே கூடும் ஆயிரத்தில் ஒருத்தர் கூட இலக்கியப் புத்தகங்களை வாங்குவதாகத் தெரியவில்லை.  மிருகக் காட்சி சாலையில் கூண்டுக்குள் கிடக்கும் மிருகங்களைப் போல் ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்த சில எழுத்தாளர்களோடு நானும் அமர்ந்தேன் சிறிது நேரம்.  வெள்ளிக்கிழமை நடந்த வாசகர்களுடனான கலந்துரையாடல் படு சொதப்பல்.  விளம்பரமே செய்யப்படாமல் முதல் நாள் என்னைப் பலி கொடுத்தார்கள்.  எனக்கு இது … Read more