அநாவசியமாக ஊர் வாயில் விழ விருப்பமில்லை…

எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சாதனாவைச் சொன்னபோது, வளன் அரசுவைச் சொன்னபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. காயத்ரியைச் சொன்னபோது ஒரே அக்கப்போராகி விட்டது. அந்த அக்கப்போரில் எனக்கே கொஞ்சம் பயமாகிப் போனது, சிறுகதையில் தேறி விட்டாள், நாவலில் போகப் போக சொதப்பி விடுவாளோ என்று. இதுவரை பத்துப் பன்னிரண்டு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். போகப் போக என் பயம் நீங்கி விட்டது. பெயரைக் காப்பாற்றி விட்டாள். இப்போது இந்த இரண்டாம் அத்தியாயம். இதைப் படித்த போது எனக்கு … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 4

ஜூன் 30 அன்று நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்குக்காக நாம் உரையாட இருக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என்ன படங்கள் என்று இப்போதே சொன்னால் ஆர்வம் குன்றி விடும். ஆறு மணி நேரம் பேசுவேன். அந்தப் பேச்சை குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால் ஒரு ஆண்டுக் காலத்துக்கு நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அநேகமாக இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இயக்குனர்களாக இருப்பார்கள். (சே, இந்த வாக்கியத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். வந்து விழுந்து விட்டது. … Read more