ArtReviewவில் அடியேன் கட்டுரை

ArtReview Asiaவிலும் ArtReview-விலுமாக கடந்த நாலு ஆண்டுகளாக நான் Notes from Madras என்ற தலைப்பில் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கான பத்திரிகை. நான் மட்டுமே அதில் தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய பல்வேறு விஷயங்களை எழுதி வருகிறேன். பொதுவாக இப்படி வெளியே போய் எழுதுபவர்கள் மேற்கத்தியர்களுக்குத் தோதாக இந்தியாவைத் திட்டி எழுதுவது வழக்கம். நான் இந்தியாவைத் திட்டி எழுதுவேன், ஆனால் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் அல்ல. இங்கே உள்ள பத்திரிகைகளில். இங்கே திட்டி எழுதி விட்டு தேசத் துரோகி பட்டம் வாங்கிக் கொள்வேன். அங்கே மோடி பற்றியும் வளர்ந்து வரும் ஃபாஸிஸம் பற்றியும் திட்டுவேன் என்று எதிர்பார்ப்பார்கள். நானோ இங்கே உள்ள கோவில் சிற்பங்கள் பற்றி எழுதுவேன். இந்த முறை இந்தியத் துறவிகள் பற்றி எழுதினேன். மேற்கத்தியர்களால் இந்தியாவைப் புரிந்து கொள்ள இயலாது என்பது என் கருத்து. அதை இந்தக் கட்டுரையில் வைத்திருக்கிறேன்.

இந்தப் பத்திரிகை சீனா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகம் வாசிக்கப்படுகிறது. அதனால் ஜப்பானில் எனக்கு – ரஜினிக்கு அடுத்தபடியாக – ரசிகர்கள் அதிகம் உண்டு என்பதையும் அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் கூட ஒரு ஜப்பானியப் பத்திரிகை மாதம் ஒரு பத்திரிகை என்னிடம் கட்டுரை கேட்டது. 500 வார்த்தைக்கு 500 டாலர். ஒரே ஒரு சப்பை மேட்டரால் கை நழுவிப் போனது. அதற்குத் தமிழ்க் கலாச்சார சூழலே காரணம். இங்கே மாதா மாதம் நடக்கும் கலாச்சார நிகழ்வு பற்றி எழுதணுமாம். அடப் பாவிகளா, கமல்ஹாசன் ஜெயமோகன் அளவுக்கு சுறுசுறுப்பு இல்லையே, ரஜினியும் ஆளைக் காணோம், விஷயத்தைச் சொன்னேன். சரி, அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள். ஏதோ தமிழ்நாட்டை சீலே என்று நினைத்து விட்டார்கள் போல.

சமீபத்திய என் கட்டுரை லிங்க்:

https://artreview.com/the-guru-new-groove-notes-from-madras/