இரண்டு குறிப்புகள்

என் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் கடந்த இருபது மாதங்களாக ஆன்லைன் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. வங்கி மறுத்து விடுவதாக அறிவிப்பு வருகிறது. போனில் கேட்டால் நேரில் வா என்கிறார்கள். ஐசிஐசிஐ வீட்டுக்கு எதிரே உள்ளது. இருபது மாதங்களாக நேரில் செல்ல நேரம் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிக்கு போன் செய்தால் இதோ அதோ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீராம் மற்றும் அன்னபூர்ணி மூலம் சாமான்களைத் தருவித்துக் கொண்டு பெரிய பணமாக இருந்தால் ஸ்ரீராமுக்கு ஜி பே மூலம் பணத்தை அனுப்பி விடுவேன். ஜி பே மட்டும் வேலை செய்கிறது. தற்சமயம் ஸ்ரீராம் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என்பதால் மீண்டும் அன்னபூர்ணியிடமே சொன்னேன். அன்னபூர்ணியிடம் என்ன விஷயம் என்றால் ஜி பே மூலம் பணம் அனுப்பவா என்றால் என்னை அவமானப்படுத்தி விட்டதாக முகநூலில் எழுதவா என்கிறார்.

இருபது மாதமாக இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது…

Tarikh-i-Dilkusha என்ற பெர்ஷிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்தில் அல்லது நூலகத்தில் கிடைக்குமா? Bhimsen Saxena எழுதியது. இவர் ஔரங்கசீப்பின் படைவீரராக இருந்தவர். வேறு எந்த நூலின் லிங்கும் அனுப்ப வேண்டாம், தயவுசெயது…