எனது நூலகம்

தியாகராஜா நாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன். இனி ஒரு வருட காலத்துக்கு அந்த உலகில்தான் இருக்க முடியும். என் நண்பர்கள் சிலர் தங்கள் நாவலை எழுத பத்துப் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்கள். எனக்கு அந்த லக்‌ஷுரி இல்லை. வயது 70. எனவே ஒரு ஆண்டில் முடித்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். இடையில் கட்டுரைகளில் காலம் கடத்தக் கூடாது. எழுதிக் கொண்டிருக்கும்போது ஏதோ புத்தகத்தை எடுக்கத் திரும்பினேன். அப்போது கண்ட காட்சியைப் பதிவு செய்தேன். கீழே: