பெங்களூர் சந்திப்பு (தொடர்ச்சி)

நாளை (9 மே) காலை பதினோரு மணிக்கு பெங்களூர் கிளம்புகிறேன். நாளை இரவும் பத்தாம் தேதி இரவும் என்னை சந்திக்கலாம். பதினொன்றாம் தேதி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸின் இரவு விருந்தில் கலந்து கொள்வதால் இரவு பத்து மணிக்கு மேல்தான் என் நேரம் என் கையில் இருக்கும். ஆனால் பன்னிரண்டாம் தேதி மதியம் உரையாடல் இருப்பதால் பதினோரு இரவு நீண்ட நேரம் கண் விழித்திருக்க இயலாது.

இதற்கிடையில் மருத்துவர் பாஸ்கரனின் பிறந்த நாளும் பதினொன்றாம் தேதிதான் வருகிறது. காஃபி, டீ, வைன் எதுவும் அருந்த மாட்டார். சித்த மருத்துவர். எப்படிக் கொண்டாடலாம் என்று அவரிடமே கேட்கலாம் என்று இருக்கிறேன்.