You are the reason…

நான் எழுதிய முதல் கதையான முள் ஒரு காதல் கதை. மோகமுள் தமிழ் இலக்கியத்தின் உன்னதமான காதல் கதை. உலக மொழிகளில் சொன்னால் அன்னா கரினினா, மதாம் பொவாரி ஆகிய இரண்டும். நவீன தமிழ் இலக்கியத்தில் எக்ஸைல். அந்த நாவல் அதில் உள்ள காதலுக்காகக் கொண்டாடப்படாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டது. ஆனாலும் நான் அதை அன்னா கரினினா, மதாம் பொவாரி, மோகமுள் ஆகிய மூன்றையும் மனதில் கொண்டே அவற்றின் நவீன வடிவமாகவே எழுதினேன். ஆனால் காதலே அதன் மையப்புள்ளியாக இல்லாமல் போனதால் வாசகர் கவனம் அதில் தொற்றாமல் போய்விட்டது. இப்போது பெருமாளுக்கு அவன் தோழி பின்வரும் பாடலை அனுப்பியிருக்கிறாள். உல்லாசம் நாவலில் வருகிறாள். அவளைச் சந்திக்கும்போது பெருமாளின் வயது அறுபத்தாறு. அவள் வயது இருபத்து நான்கு. இந்தப் பாடலைக் கேட்டதும் அவனுக்கு அவளிடம் இதை உனக்குப் பிடித்த பாடலாக அனுப்பினாயா அல்லது அதில் உள்ள வரிகளை அவனுக்கு நீ எழுதுவதாக அனுப்பினாயா என்று கேட்க விரும்பினான். ஆனாலும் மொக்கை வாங்கக் கூடாது என்று நினைத்துக் கேட்கவில்லை. பாடலைப் பலமுறை கேட்ட பிறகு இதை வைத்து ஒரு காதல் கதை எழுதினால் என்ன தோன்றியது.

https://youtu.be/ByfFurjQDb0?si=fDhJHFS4UIYV-AJU