ரசித்துப் படித்த கட்டுரை

மிகுந்த ராணுவ ஒழுங்குடன் அமைந்திருந்த என் தினசரி வாழ்க்கை கடந்த ஒரு மாதமாக ஹிப்பிகளின் வாழ்வு போல் அமைந்து விட்டது.  தியானம் இல்லை.  வாரம் இரண்டு முறை அப்யங்கம் இல்லை.  வாரம் ஒரு முறை ரெமி மார்ட்டின் இல்லை.  கடிதங்களுக்கு பதில் எழுதவில்லை.  இரவில் முறையான நேரத்தில் உறங்கப் போவதில்லை.  உலகக் கால்பந்தாட்டம் காரணம் இல்லை.  மிகச் சில ஆட்டங்களையே பார்க்கிறேன்.  இந்த ஒழுங்கற்ற தினசரி வாழ்வுக்குக் காரணம், எக்ஸைல் தான்.  1600 பக்கங்களில் 1300 பக்கங்களை நெருங்கிய போது 1970களில் தமிழ்நாட்டில் நிலவிய இந்தி சினிமா மோகத்தைப் பற்றிய ஞாபகம் வந்தது.  பாபி என்ற படத்தை நான் 50 முறை பார்த்திருக்கிறேன்.  சரி, நான் மட்டும்தான் அப்படியா என்று நண்பர் ராகவனிடம் கேட்டேன்.  அவருக்கு என்னை விட மூன்று வயது கம்மி.  அவரோ இந்தி சினிமாவினால்தான் என் வாழ்க்கையே கெட்டுப் போனது என்றார்.  அதை எழுத வேண்டாமா?  எனவே பாபி, யாதோங் கி பாராத், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா, டிம்பிள் கபாடியா, ஆராதனா, கிஷோர் குமார், ஆர்.டி. பர்மன், அமர் ப்ரேம் என்ற ஒரு உலகத்தில் வாழ்கிறேன்.  தினமும் மூன்று சினிமா.  எழுபதுகள்.  சரி, சுமையைக் குறைக்க அராத்துவிடம் கொஞ்சம் தகவல் கேட்கலாமா என்று நினைத்து போன் செய்தேன்.  1973-இல் பாபி வந்த சமயத்தில் நான் பிறக்கவே இல்லீங்களே என்றார்.  எஸ். ஆல்பர்ட்டுக்கு போன் செய்ய வேண்டும்.  நான் மட்டும் அல்ல… 1974-ஆம்  ஆண்டு மாணவப் பருவத்தில் இருந்தவர்கள் பாபியை குறைந்த பட்சம் 20 முறை பார்த்திருக்கிறார்கள்.  ஏன் என்பதே இப்போதைய என் ஆய்வு.  விரைவில் மீதி முன்னூறு பக்கங்களையும் முடிப்பேன்.  இந்த இந்தி சினிமா விஷயம் ஒரு 30 பக்கங்களை எடுக்கும்…  இடையில் இன்று ஒரு கட்டுரை படித்தேன்.  செமத்தியான கட்டுரை.  நீங்களும் படிக்கலாம்…

http://www.tamilhindu.com/2014/07/vethal_tour/

Comments are closed.