மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை

“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்எனக் கேட்கும் மோகினீ…, “எந்த தேசம் போனாலும்அங்கே பெண்களையும்குழந்தைகளையும் தெருக்களையும்கவனிப்பேன்எங்கே குழந்தைகளும்பெண்களும் மகிழ்ச்சியாய்இருக்கிறார்களோ,எங்கே தெருக்களில் நாய்கள்அலைவதில்லையோ,அதுவே என் கனவு தேசம் அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்பத்திரிகையில் செய்திகளே இல்லைபிரதமரின் வெளியுறவுச்செய்திகளும்சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்மட்டுமே இருந்தனமருத்துவரும் யாருமில்லைபோலீஸ்கூட இல்லைஇரவுக் காட்சி சினிமாவுக்குப்போனபோது என் முன்னால்நின்றவர்தான் பிரதமர் என்றான்எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்சினிமா முடிந்து பிரதமர்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த தேசத்தில் என்னால்எழுதவே முடியாதுநரகத்திலிருந்து மட்டுமேஎழுத முடியும்ஜாரின் ரஷ்யாவில்எத்தனையெத்தனை மேதைகள்எழுதினார்கள் நீ என்னோடு பேசினால்கவிதை நின்றுவிடுமென் மோகினிக் குட்டீ!!”

கோபி கிருஷ்ணன், ரிஷி மற்றும் நாற்பது வயதுத் தோழி

ரிஷி அழைத்தவுடன்போய்ப் பார்த்தேன்யாராவது வற்புறுத்தி அழைத்தால்உடனே போய்ப் பார்த்துவிடுவேன்அப்படி ஒருமுறை பார்க்காமல்போய்தான் ஒரு சம்பவம்நடந்துவிட்டது கோபி கிருஷ்ணன் அழைத்தார்பத்து நாட்கள் தொடர்ந்துஃபோனில் அழைத்தார்இதோ இதோ என்றுநாட்களைக் கடத்தினேன்அவர் வீட்டுக் கழிப்பறையில்வெளிச்சம் கிடையாதுகும்மிருட்டாக இருக்கும்அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்கிடையாதுஅதனால்தான் நாட்களைக்கடத்தினேன்பிறகு ஒரு போஸ்ட்கார்ட்போட்டார்போகலாம் என்று முடிவு செய்தபோதுகோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தொழிலே அதுதான் நல்ல பணம்வருகிறது கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்போய்ப் பேசுவான்நானேகூட ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு ப்ரேக் அப் ஆனபோதுஅவனிடம்தான் போய்அவன் பேச்சைக் கேட்டுக் … Read more