ஞானமும் குண்டாந்தடியும்

Alain Robbe-Grillet எழுதிய சுயசரிதை Ghosts in the Mirror புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாங்கித் தருவதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால் அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தருவதற்குத் தோதான நண்பர்கள் கிடைக்கவில்லை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான போக்குவரத்து கம்மியாகி விட்டதோ என ஐயுறுகிறேன். வரக் கூடிய நண்பர்கள் யாரும் இருந்தால் எனக்கு எழுதுங்கள். அல்லது, எங்காவது நூலகத்தில் இருந்தாலும் தகவல் தாருங்கள். எப்பாடு பட்டாவது ஏதோ ஒரு நூலகத்திலிருந்து எனக்குத் தேவைப்படும் நூல்களை எடுத்துக்கொடுத்து விடும் ஸ்ரீராமினாலேயே இந்த நூலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்க நூல் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. விலை பன்னிரண்டு டாலர் என்று நினைக்கிறேன்.

charu.nivedita.india@gmail.com

இன்னொரு முக்கியமான விஷயம் பற்றி எழுதலாமா, எழுதாமல் விட்டு விடலாமா என்று சீனியிடம் யோசனை கேட்டேன். அவரிடம் விவாதித்த பிறகே இதை எழுதத் துணிகிறேன். இதை எழுதினால் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, எனக்குள் குதித்துக்கொண்டிருக்கும் மன உளைச்சல் சரியாகி விடும். எனக்கு எழுத்துதான் மருந்து. எதிர்மறை விஷயம் என்னவென்றால், வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வரக் கூடிய புதிய நண்பர்கள் வராமல் போகக்கூடும். சென்ற வாரம் நடந்த சந்திப்புக்கே பலர் வரவில்லை. வராமல் போன முக்கியஸ்தர்கள் குமரேசன், செக்கந்தர். ஒருநாளாவது வந்து விட்டுப் போவார்கள். வரவில்லை.

பல நூறு முறை எழுதியதுதான். நான் எழுத ஆரம்பித்த முதல் இருபது ஆண்டுகளில் சிறுபத்திரிகை இலக்கியவாதிகள் என்னை ஒரு தீண்டத்தகாதவனாகவே நடத்தினார்கள். நேற்று கார்ல் மார்க்ஸ் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார். 1999இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெயகாந்தன் பேசுகிறார். திருப்பூர் கிருஷ்ணன் தலைமை. எஸ். ஆல்பர்ட், அம்ஷன் குமார் என்று பலரும் பேசினார்கள். அசோகமித்திரன் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நான் ஒரு ஓரத்தில் சட்டையை பேண்டுக்குள் செருகிவிட்டு ஒரு வங்கி அதிகாரி மாதிரி நின்று கொண்டிருக்கிறேன்.

ஜெயகாந்தன் வழக்கம்போல் முழங்குகிறார். அற்புதமான பேச்சாளர்.

ஆனால் எனக்கு அந்தக் காணொலியைக் கண்டபோது உள்ளுக்குள் ரௌத்திரம் பொங்கியது. தாயளி, எந்த அளவுக்கு அப்போது நம்மைக் கீழ்த்தரமாக நடத்தினார்கள் எல்லோரும் என்று. ஒரு இலக்கியவாதி கூட பாக்கியில்லை. இந்திரா பார்த்தசாரதி மட்டுமே விதிவிலக்கு.

இருபது ஆண்டுகள் என் இலக்கிய வாழ்வில் இருண்ட காலம். என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்தியவர்களோடுதான் நான் உரையாட வேண்டும். மது அருந்த வேண்டும். இறுதியில் அடிதடி சண்டையில் முடியும். மது அருந்தாத பகல் நேரங்கள் கூட விதிவிலக்கு அல்ல. ஒரு உதாரணம் தருகிறேன். திருநெல்வேலியில் ஒரு கல்லூரியில் ஒரு இலக்கியக் கூட்டம். நான் பேசினேன். பாரிஸில் வசிக்கும் கலாமோகன் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். அதற்குக் கருத்துரை சொல்ல வந்த ஒரு ’சிறுபத்திரிகை’, சாரு பாரிஸ் செல்வதற்காக வேண்டி கலாமோகனை உயர்த்திப் பேசுகிறார் என்றார். நேராக எழுந்து போய் மைக்கை எடுத்துத் தரையில் அடித்தேன். மேஜையை எடுத்து உடைத்தேன். பேசியவரை அடிக்கப் பாய்ந்தேன். ஒரே ரகளை. கூட்டம் நின்று போயிற்று. மது அருந்தாமல் இருந்த பகல் நேரமே இப்படி என்றால், மது அருந்திய இரவுகள் எப்படிப் போயிருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். என்னை இடுப்புக்குக் கீழே தாக்குவார்கள். நான் கத்தியை உருவுவேன். ஒருமுறை சென்னை தாதா ஒருவரை அழைத்து என் எதிராளியைத் தாக்குவதற்காக ஃபோன் செய்தேன். தாதா ஃபோனை எடுக்கவில்லை என்றதும் பக்கத்தில் இருந்த குடையை எடுத்து அதன் கத்திப் பகுதியால் அன்பரைத் தாக்கினேன். நகர்ந்து விட்டதால் நான் சிறைத் தண்டனையிலிருந்து தப்பினேன். அன்பர் சொன்னது, “நான் தானே சாரு உங்களுக்கு ஸீரோ டிகிரியை எழுதிக் கொடுத்தேன்?”

எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவான பிறகுதான் இந்த அடிதடி மன உளைச்சல் எல்லாம் நின்றது. வாசகர் வட்டம் உருவாக சீனி முக்கியமான காரணம். இப்போது லண்டனில் வசிக்கும் குருதான் அதற்கான அடிக்கல்லை நாட்டினார். முதல் சந்திப்பு பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்தது.

வாசகர் வட்ட சந்திப்பு என்றால் பஜனை மண்டலி அல்ல. மாற்றுக் கருத்துக்கள் மோதும் களம். செல்வாவும், ராஜேஷும், ராஜா வெங்கடேஷும், சீனியும் கடுமையாக என்னோடு விவாதிப்பார்கள். நான் சொல்லும் நூறு விஷயங்களில் தொண்ணூறு விஷயங்களில் சீனிக்கு மாற்றுக் கருத்து இருக்கும். சென்ற வாரம் கூட உலகின் தலை சிறந்த கதைகளில் ஒன்றான சிறிது வெளிச்சம் (கு.ப.ரா.) ஒரு ஏமாற்றுக் கதை என்று இரண்டு மணி நேரம் விவாதித்தார் சீனி. எனக்கு விவாதம் செய்யத் தெரியாது. அந்தக் கதையின் சிறப்பு குறித்து என்னால் பேசி வெல்லத் தெரியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

ஆனால் ஆனானப்பட்ட சீனியே சிறந்த கதை என்று குறிப்பிட்ட ஒரு சிறுகதையை நான் கடுமையாக அடித்துப் பேசினேன். விவாதத்தில் நான் வென்று விட்டேன் என்றே நினைக்கிறேன். அது ஒரு ஏமாற்றுக் கதை என்று நிறுவி விட்டேன். அப்போது சீனி ஒரு விஷயத்தை அவதானித்துச் சொன்னார். என்னால் ஒரு விஷயத்தைத் தாக்கி அதை இல்லை என்று ஆக்கி, குழிதோண்டிப் புதைக்கத் தெரிகிறது. முடிகிறது. ஆனால் நான் பெரிதாக நம்பும் எது ஒன்றையும் வலுவான காரணங்களோடு நிறுவத் தெரியவில்லை.

இப்படியாகத்தான் வாசகர் வட்ட சந்திப்புகள் போகும். மாலை ஏழுக்கு ஆரம்பித்து காலை ஐந்து மணிக்குத்தான் முடியும். இதில் பாதிப்பேர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள். செல்வாவிடம் அடிக்கடி கேட்பேன், உரையாடல் சலிப்பாக இருந்ததா என்று. ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தது போல் இருந்தது என்றே எப்போதும் சொல்வார். செல்வா பொதுவாக உண்மையை மட்டுமே பேசுபவர். குடிப்பழக்கம் இல்லாதவர்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வாசகர் வட்டச் சந்திப்புகள் என்னுடைய பழைய காலத்து சிறுபத்திரிகை அடிதடி வெட்டுக் குத்து கூட்டமாகவே முடிகிறது. ஒரே ஒரு நண்பர்தான் காரணம். அந்த நண்பர் குடிப்பழக்கம் இல்லாதவர். இளைஞர். எத்தனையோ முறை சொல்லி விட்டேன். நண்பர் அதைக் கேட்க மாட்டேன் என்கிறார். என்னை மட்டுமல்லாமல் என் நெருங்கிய நண்பர்களையும் அவமானப்படுத்தி அவர்களை அழ வைக்கிறார். ஆம். ஒருத்தரை கேவிக் கேவி அழ வைத்தார். இன்னொருவரின் பெயரை வைத்துக் கேலி செய்து என்னை அழ விட்டார். கேலிக்கு உள்ளானவர் எனக்கு மிக அதிக உதவிகள் செய்து வருபவர். இந்தியாவின் மிக முக்கியமான விஞ்ஞானி.

என்ன செய்வார் என்று ஒரு உதாரணம். ஏன் சாரு, பூனைகளுக்காக மாதம் அறுபதாயிரம் செலவு செய்கிறீர்கள்? அதற்காக வாசகர்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள்? அவைகளை எங்காவது கொண்டு போய் விட்டு விடுங்களேன்?

தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லித் திட்டி பக்கத்தில் கிடக்கும் மேஜை நாற்காலிகளை எடுத்து உடைத்து பெரும் ரகளை செய்வேன். இதற்கா நாம் சந்திப்பு நடத்துகிறோம்?

கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள். சீனியும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆனால் அதில் என்னை இடுப்புக்குக் கீழே தாக்கும் தொனி இருக்காது. எப்படி என்று சீனிதான் இதை விவரமாக எழுத வேண்டும். ஒரு உதாரணத்துக்காக இதைச் சொன்னேன். என்னிடமிருந்து பெற்றுக் கொள்ள கோடிக்கணக்கான விஷயங்கள் உள்ளன. நேற்றுதான் எழுதினேன். ஒரு பேட்டி என்றால் அதற்காக நான் என்னென்ன படிக்கிறேன் என்று. வில்லியம் காஸ் பற்றி நான் பேச ஆரம்பித்தால் நாலு மணி நேரம் பேசுவேன். நீங்கள் இந்த ஜென்மத்தில் வில்லியம் காஸைப் படிக்க வாய்ப்பு இல்லை. அந்த ஞானத்தை அல்லவா நீங்கள் என்னிடமிருந்து பெற வேண்டும்? ஏன் என் தோழிகளைப் பற்றியும் பூனைகளைப் பற்றியும் பேசி என் புடுக்கில் அடிக்கிறீர் தம்பி?

பெங்களூர் சந்திப்பில் அந்தத் தம்பி மூன்றாம் நாள் கிளம்பியதும் நான்காம் இரவு, ஐந்தாம் இரவு இரண்டு இரவுகளிலும் முழுக்க முழுக்க மாற்றுக் கருத்துக்கள்தான் ஓடின. நான் மேஜிக் பற்றிப் பேசினேன். சீனி வழக்கம் போல் மறுத்தார். இரண்டு மணி நேரம் பேசியிருப்போம். கடைசியில் “வாழ்வின் அற்புதங்களைக் காணத் தெரியாத உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு என் உரையாடலை முடித்துக்கொண்டேன். சீனி போய் படுத்து விட்டார். காலை மூன்று மணி இருக்கும். தம்பியாக இருந்தால் “உங்களைப் பார்த்துத்தான் நான் பரிதாபப்படுகிறேன்” என்று ஆரம்பித்து வெட்டுக்குத்தில் முடித்திருப்பார்.

யாரும் எனக்கு ஜால்ரா தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் சினிமா நடிகன் அல்ல. ஆனால் சந்திப்பு ரசாபாசம் ஆகும் அளவுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்.

ஆனால் தம்பி இதைக் கேட்க மாட்டார். இப்படியேதான் போகும். சீனி, ராஜா வெங்கடேஷ், செல்வா போன்றவர்கள்தான் இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது பற்றி சீனியும், செல்வாவும், ராஜாவும் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

இருபது ஆண்டுகள் என்னை ass fuck செய்திருக்கிறார்கள் சிறுபத்திரிகை அன்பர்கள். இனிமேலும் அதையே செய்வதற்கு நான் உடன்பட மாட்டேன். ரௌத்திரமாகவே மாறுவேன்.