பெங்களூர் இலக்கிய விழா – மே 10, 11, 12

பெங்களூரில் உள்ள Indian Institute of Human Settlements இல் மே மாதம் 10, 11, 12 தேதிகளில் ஒரு இலக்கிய விழா நடைபெறுகிறது. அதில் 12-ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு நான் கலந்து கொள்ளும் விவாத அரங்கு உள்ளது. தலைப்பு: The Ties That Bind Us: Reading Marquez Today.

இனிமேலான விவாத அரங்குகளில் என் பங்களிப்பில் தங்கு தடங்கல் எதுவும் இருக்காது. பேச வேண்டிய விஷயங்களை முன்கூட்டியே குறிப்புகள் எடுத்துக்கொண்டு போகலாம் என்று இருக்கிறேன். சமீபத்திய நிகழ்வுகளிலும் அப்படித்தான் செய்தேன். நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும். உரையாடலில் கலந்து கொள்பவர்கள்: ஏ.ஜே. தாமஸ், பல்லவி நாராயண், சாரு நிவேதிதா. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: கார்த்திக் வெங்கடேஷ்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி என் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறேன். வராதவர்கள் என்னை இதற்குப் பிறகு அழைக்கும் அவர்களுடைய எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன். அவர்கள் வராததையே காரணமாகச் சொல்லி மறுத்து விடுவேன். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் முன்பதிவு செய்து விடுங்கள். கட்டணம் எதுவும் இல்லை.

12-ஆம் தேதி மார்க்கேஸ் விவாத அரங்கில் கலந்து கொள்பவர்கள் :

ஏ.ஜே. தாமஸ்: கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சாகித்ய அகாதமி நடத்தும் இந்திய இலக்கியம் என்ற பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.

பல்லவி நாராயண் : கல்வியாளர், ஐஐடி தில்லி

சாரு நிவேதிதா

கார்த்திக் வெங்கடேஷ்: Executive Editor, Penguin Random House.

Free Entry

10–12 May 2024

IIHS Bengaluru City Campus

The three-day festival is packed with workshops, author conversations, panel discussions installations and exhibitions, a performance, and much more!

Register now: https://bit.ly/3UagIz7

Stay tuned for more updates about the festival over the coming weeks…

Register now: https://bit.ly/3UagIz7

Stay tuned for more updates about the festival over the coming weeks…

#CityScripts2024#CS24#LiteratureFestival#BangaloreEvents#IIHSin#LitFest