அர்ஜுன் ராஜேந்திரன் ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆங்கில இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இப்போது சில பத்திரிகைகளின் ஆலோசகராக இருக்கிறார். 2024-இல் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அதில் Conversations with Aurangzeb நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு பத்தி உள்ளது. மற்ற புத்தகங்களில் ஹங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai எழுதிய Satantango நாவலும் இடம் பெறுகிறது. இந்த நாவல் பற்றியும் க்ராஸ்னஹோர்க்காய் பற்றியும் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். ட்யூரின் ஹார்ஸ் திரைப்படத்தின் கதாசிரியர். அவரோடு என் பெயர் குறிப்பிடப்பட்ட்து எனக்கு மகிழ்ச்சி அளித்த்து.
அர்ஜுன் ராஜேந்திரனின் ஃபேஸ்புக் பதிவின் இணைப்பு: