missing you remix
go crazy
latin moon என்கிற ஜலக்கிரீடை
chasing the rush
missing you பாடலின் ஃப்ரெஞ்ச் வடிவம் Tu me manques
burning
phare de la lune
burning
இதெல்லாம் மியா மர்த்தீனா பாடி பின் வரும் தொகுப்பில் உள்ள பாடல்கள்.
https://www.youtube.com/watch?v=sF8SJmd0xWk&index=1&list=PL9C0238F4D8919247&hd=1
பின்வரும் இணைப்பில் heartbreaker என்ற பாடல் உள்ளது.
https://www.youtube.com/watch?v=SgP06U2BkjQ&hd=1
மியா மார்த்தினா என்று எழுதியிருந்தேன் அல்லவா? ஆனால் மார்த்தினா தன் பெயரை உச்சரிக்கும் மியா மர்த்தீனா என்று தான் சொல்கிறார். சரிதான். ஸ்பானிஷில் கொஞ்சும் போது mi vida (my life) என்பதை மி வீதா என்றுதானே சொல்கிறார்கள். அப்படியானால் மியா மர்த்தீனா தான் சரி.
சமீபத்தில் நான்கு பேரிடமிருந்து (புவனேஸ்வரி, நிர்மல், கணேஷ் அன்பு, ஜெகா) ஒரே பாணியில், கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகளில் ஏதோ பேசி வைத்துக் கொண்டது போல் கடிதங்கள் வந்தன. ’தீட்சிதர் என்கிறீர்கள், பகவத் கீதை என்கிறீர்கள், தியானம் என்கிறீர்கள்…பயமாக இருக்கிறது… இப்படியே போனால் என்னதான் ஆவது?’ என்பதே இவர்கள் கடிதத்தின் சாரம்.
அப்படியெல்லாம் நான் ஒரேயடியாக ஓடி விட மாட்டேன். ஓடினாலும் என்னை யாரும் ஏற்க மாட்டார்கள். அது எனக்கு மிக நன்றாகவே தெரியும். மோடியை ஆதரித்து எழுதினேன். ஆனால் என்னை அந்தக் கட்சி ஆட்கள் வைரியாகவே பார்ப்பார்கள். அவர்கள் என்னை நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களோடு சேர்ந்து கொண்டு நானும் ஓரினச் சேர்க்கை ஒரு மனநோய் என்று சொல்ல வேண்டும். மேற்கத்திய கலாச்சாரம் சீரழிவுக் கலாச்சாரம் என்று சொல்ல வேண்டும். ஜப்பானில் மோடி இந்தியா பற்றிச் சொல்லியிருப்பதெல்லாம் உண்மை என்று பொய் சொல்ல வேண்டும். அதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது. நான் வேறு ஆள். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் அடங்க மாட்டேன். கம்யூனிஸ்டுகளுக்கும் நான் வைரி. இந்துத்துவாவுக்கும் நான் வைரி. எனவே எனக்கு மன உளைச்சலோடு கடிதம் எழுதிய அன்பர்கள் நால்வரும் மேலே கண்டுள்ள மியா மர்த்தீனா, Massari போன்றவர்களைக் கேட்டு மனமகிழ்ச்சி கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கூடவே கையில் Martini காக்டெய்லும் வைத்துக் கொள்ளுங்கள். லெபனான் அரபு தேசங்களின் ஃப்ரான்ஸ். பெய்ரூட் கிட்டத்தட்ட பாரிஸ்தான். மஸாரி பெய்ரூட்டைச் சேர்ந்தவர். நம் ஊர் ஹனி சிங்கை விட இவர் அட்டகாசம்.
https://www.youtube.com/watch?v=SgP06U2BkjQ&hd=1
Enjoy!
Comments are closed.