லத்தீன் அமெரிக்க சினிமா (2) : ஒரு சிறிய விளக்கம்

லத்தீன் அமெரிக்க சினிமா தொடரை சற்று கவனத்துடன் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அது வெறும் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய கட்டுரை மட்டும் அல்ல.  தென்னமெரிக்காவின் அரசியல், சமூகம், கலாச்சாரம், மானுடவியல், இலக்கியம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதுதான் லத்தீன் அமெரிக்க சினிமா.  இதை அந்தக் கட்டுரைத் தொடரைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். போகிற போக்கில் படிக்க முடியாது.  அதில் நான் கொடுத்துள்ள இணைப்புகளையும் பார்க்க வேண்டும்.  அதில் நான் குறிப்பிடும் படங்களையும் பார்க்க வேண்டும்.  இல்லாவிட்டால் அந்தக் கட்டுரையிலிருந்து நீங்கள் எதையும் பெற முடியாது.  சற்றே சிரத்தையுடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சென்ற இணைப்பில் பேசா மொழியில் பதிவேற்றம் செய்யும் போது எது க்ளாபர் ரோச்சாவின் மேற்கோள், எது என் வாசகங்கள் என்ற குழப்பம் இருந்தது.  அது என்னுடைய தவறு.  சரியாகப் பிரித்து எழுதாமல் அனுப்பி விட்டேன்.  இப்போது அந்தத் தவறு சரி செய்யப்பட்டு விட்டது.  அச்சு ஊடகம் என்றால் இது சாத்தியம் இல்லை.  மேலும், இணைய இதழ் என்பதால் நிறைய காணொளிகளையும் இணைக்க முடிகிறது.  இந்தத் திருத்தப்பட்ட கட்டுரையைப் படியுங்கள்.

http://pesaamoli.com

 

Comments are closed.