ஸ்வராஜ்யா விவாதம்…

சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லவி ராவ் தனது ப்ளாகில் ஸீரோ டிகிரி பற்றித் தனது மதிப்புரையை எழுதினார்.  உடனே அவருக்கு டஜன் கணக்கில் வசை கடிதங்கள் போயின.  அது எல்லாவற்றையும் பிரசுரித்தார் பல்லவி.  ரொம்ப அசிங்கமாக இருந்ததை மட்டும் பிரசுரிக்கவில்லை.  மொத்தம் 139 எதிர்வினைகள் அவருடைய கட்டுரைக்கு வந்தன.  என்னைப் பற்றி ஆங்கிலத்தில் எது வந்தாலும் அல்லது நான் ஆங்கிலத்தில் எழுதினாலும் அங்கே போய் சாரு ஒரு சராசரி எழுத்தாளன், போலி என்று எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது.  இதைப் பற்றி நான் நூற்றுக் கணக்கான தடவை எழுதியிஉக்கிறேன்.  ஸீரோ டிகிரி மலையாள மொழிபெயர்ப்புக்கு ஸக்கரியாவிடம் நான் முன்னுரை கேட்டிருந்த போதும் இதுவே நடந்தது.  ஸக்கரியாவுக்கு ஃபோன் போட்டு சாரு ஒரு போர்னோ எழுத்தாளர், அவரை இங்கே யாரும் மதிப்பதும் இல்லை என்று போட்டுக் கொடுக்க, அவர் பப்ளிகேஷனுக்குப் போய் விட்ட தன் முன்னுரையைத் திரும்ப வாங்கி இன்னும் சில பக்கங்களைச் சேர்த்து எழுதிக் கொடுத்தார்.

இப்போது ஸ்வராஜ்யாவிலும் போய் அதையே செய்திருக்கிறார் ஒருவர்.  சாரு ஒரு வேஸ்ட், அவன் எழுத்தாளனே இல்லை எட்செட்ரா எட்செட்ரா.  எவ்வளவு நல்லவன் பாருங்கள் தமிழன்.

http://swarajyamag.com/featured/camp-as-culture/#disqus_thread

http://uglywords.wordpress.com/2012/03/02/on-charu-niveditas-zero-degree-trans-by-pritham-k-chakravarthy-rakesh-khanna/#more-264

 

 

Comments are closed.