மலேஷியா பயணம்

நல்ல நினைவாற்றல் உள்ளவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.  திருமாறன் என்ற வாசகர் மாணவராக இருக்கும் போதே எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுவார்.  அவர் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.  பிறகு அவர் வேலைக்குப் போனதும் ஒருமுறை என்னை மலேஷியாவுக்கு அழைத்து மலேஷியாவின் ஒரு பகுதி முழுவதையும் சுற்றிக் காண்பித்தார்.  போர்னியோ மட்டுமே செல்லவில்லை.  ஜூனில் தன் திருமணத்துக்காக இங்கே சென்னை வந்து அழைப்பிதழ் கொடுத்தார்.  அவர் திருமணத்துக்காக மலேஷியா செல்கிறேன்.  26-இல் திருமணம்.  நான் இங்கிருந்து 24 கிளம்புவேன்.  சென்ற முறை மலேஷியா வந்த போது பல நண்பர்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தால் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருப்போம் என்று அன்புடன் சொன்னார்கள்.  இப்போது முன்கூட்டியே தெரிவித்து விட்டேன்.  கூட்டம் என்று அல்ல; சாதாரண சந்திப்பாக இருந்தாலும் சரி.  ஆனால் “நீங்கள் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறீர்கள்?  அங்கே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லக் கூடாது.  உதாரணமாக, சென்ற முறை மலேஷியா வந்த போது நிறைய நாட்கள் தங்க முடிந்திருக்கும். சிங்கப்பூர் கூட செல்ல நினைத்தேன்.  ஆனால் எங்கே தங்குவது?  சிங்கப்பூரில் என்ன செய்வது?  முன்கூட்டியே தெரிவித்தும் சிங்கப்பூர் நண்பர்கள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.  அதனால் மலேஷியாவிலிருந்து சென்னை திரும்பி விட்டேன்.  இப்போது உங்களால் ஏற்பாடு செய்ய முடிந்தால் சிங்கப்பூர் வர முடியும்.

அதோடு ஓரிரண்டு தினங்கள் கம்போடியா கூட போய் வரலாம் என்று தோன்றுகிறது.  எழுதுங்கள்.  இன்னொரு முக்கிய விஷயம்.  என்னோடு அராத்துவும் வருகிறார்.

charu.nivedita.india@gmail.com

Comments are closed.