காக்கா முட்டை

காக்கா முட்டை இன்னும் பார்க்கவில்லை.  தலை போகும் அவசரத்தில் தலையணை தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இடையில் முகநூலை எட்டிப் பார்த்த போது காக்கா முட்டை என்று ஒரு படம் வந்திருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.  அதற்கு அராத்து ஒரு விமர்சனம் எழுதியுள்ளார்.  அதில் தலைமுறைகள் (பாலு மகேந்திரா) பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. என்னுடைய  சினிமா அறிவுக்கு எட்டியபடி அது சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படம்.  கடைசிக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழா என்ற அபத்தத்தை மட்டும் மறந்து விடலாம்.  காலம் பூராவும் புத்தக வெளியீட்டு விழாக்களில் தனது நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்த பாலு மகேந்திரா அந்த அபத்தக் கண்றாவி காட்சியை நீக்கியிருக்கலாம்.  மற்றபடி அது ஃபெலினி, அந்தோனியோனி, பெர்க்மன், டர்காவ்ஸ்கி, கீஸ்லோவ்ஸ்கி படங்களுக்கு இணையான ஒரு க்ளாஸிக்.  எனவே அராத்துவை Federico Fellini, Antonioni, Ingmer Bergman, Tarkaovsky, Kieslowsky போன்ற இயக்குனர்களின் இரண்டு இரண்டு படங்களைப் பார்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  பின்வருவது அராத்துவின் காக்கா முட்டை விமர்சனம்.  தமிழை எப்படி எழுதக் கூடாது என்றும் இந்தக் கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ள வேணுமாய் அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

காக்கா முட்டை  — அராத்து

எனக்கு பாலு மகேந்திராவின் தலைமுறைகள் மச மசவென தான் போனது. ஒண்ணும் பெருசா ரசிப்பின்பம் கிடைக்கவில்லை. மசாலா படங்களே பார்த்து ரத்தத்தில் ஊறிப்போய் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சாரு தலைமுறைகளை மிகவும் சிலாகித்தார். அவரின் ஆழமான விமர்சனத்தைப் படித்தும் பெரிதாக எந்த மாற்றமும் எந்த தாக்கமும் ஏற்படவில்லை. ஆனாலும் ஓப்பன் மைண்டாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். உலக சினிமாவில் பழம் தின்று கொட்டையைக் கூட போடாமல் அதையும் அரைத்துக் குடித்த சாரு சொல்கிறார் என்றால் , ஏதோ விஷயம் இருக்கிறது , நமக்கு அது உறைக்கவில்லை என்று எடுத்துக்கொண்டு போய் விட வேண்டும்.

காக்கா முட்டையையும் ஒரு மசாலா சினிமா ரசிக மனப் பான்மையில்தானே , (அதுதானே பொதுத்தமிழனின் மனநிலை? )பார்க்க முடியும்.

படத்தில் சினிமாத்தனம் எட்டிப் பார்க்கும் தருணங்கள் நிறைய இருந்தும் ஒரு இடத்தில் கூட இயக்குநர் சறுக்கவில்லை. காட்சிகள் எதிர்பார்ப்புக்கு மீறி நாம் எதிர்பாரா தருணத்தில் சடக் சடக்கென முடிந்து விடுவது ஒரு நல்ல விசித்திரமான அனுபவமாக இருக்கிறது.

தலைமுறைகளை விட இந்தப் படம் எனக்கு சற்றே சுவாரசியத்தை , படம் பார்க்கும் இன்பத்தை வழங்கினாலும் , படம் வேகம் குறைவாகவும் , ஏரித்தண்ணீர் அசைவது போல மெல்லமாகவும் சென்றது. இதைப்போன்ற படங்களை பார்த்திருக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.

இதைப்போன்ற படங்கள் தமிழுக்கு நிச்சயம் புதுசு. குப்பத்து பையன்கள் பீட்சா தின்ன ஆசைப்படுகிறார்கள் என்ற ஒரு லோக்கலான சின்ன ஒன்லைனை வைத்துக்கொண்டு இந்த அளவு ஒரிஜினாலிட்டியோடு படம் எடுப்பது பெரிய விஷயம்தான். இதே போன்ற படங்கள் கொரியாவிலோ , ஈரானிலோ வந்திருந்தால் , நம் ஆட்களே இந்தப் படத்தை இன்னும் ஆஹா ஓஹோவென கொண்டாடுவார்கள்.

இதைப்போன்ற படங்கள் எடுக்கும்போது நம் இயக்குநர்களுக்கு , பெரிய ஞானம் கிட்டி விடும். புத்தனாகவும் , கார்ல் மார்க்ஸாகவும் , அன்னை தெரஸாவாகவும் , பெரியாராகவும் , காந்தியாகவும் , கமல் ஹாஸனாகவும் , தங்கர் பச்சானாகவும் மாறி விடுவார்கள். சீரியஸாக பல அறிவுரைகளையும் , தத்துவங்களையும் போட்டு பின்னி பெடலெடுத்து நம்மை சாகடிப்பார்கள் . ஏழைப்பங்காளனாக மாறி , ஏழை ஏழை ஏழை ஏழைக்கண்ணீர் வடிப்பார்கள். மணிகண்டன் இந்த கீலா வேலையை செய்யாததற்காகவே சல்யூட் அடிக்கலாம். ஒரே ஒரு சீனில் , பொடிப்பயல் திருடறமா என கேட்கும்போது , இல்லை எடுத்துக்கறோம் என சொல்கிறார் பழரசம். இந்த ஒரு சீனில் மட்டுமே…படி termpaperswritingpros.com.

இது ஒரு புது விதமான அனுபவம் கொடுக்கும் படம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.பிரச்சாரம் , அனல் தெறிக்கும் வசனங்கள் ,குத்துப்பாட்டுகள் , க்ளோசப் பனிமலை தொப்புள் , போலி அறிவு ஜீவித்தன காட்சிகள் இல்லாததால் டாக்குமெண்ட்ரி படம் , ஷார்ட் ஃபிலிம் படம் போன்ற உணர்வு வருவது உண்மைதான். இதைப்போல இன்னும் சில படங்கள் வந்தால் பழகி விடும். படத்துக்கு சம்மந்தம் இல்லாத இன்னும் சில காட்சிகளை வெட்டி இன்னும் ஷார்ப் ஆக ஆக்கி இருக்கலாம்.

இந்த காலத்து பசங்க நடிப்பை கேக்கவா வேணும் ? பின்னி எடுக்கிறார்கள். மோகன்லாலாவது , கமலாவது , அமிதாப்பாவது போங்கைய்யா என்று தோன்றுகிறது.படத்தில் சிம்பு சிம்புவாக நடிக்கவே சிரமப்பட்டுக்கொண்டு இருக்கையில் , பொடிசுகள் கொளுத்துகிறார்கள் அந்த சீனில்.

ஒரு சில நெருடல்களை அடுத்த படத்தில் மணிகண்டன் சரி செய்து விடுவார் என்று நம்புகிறேன். என்னதான் குப்பமாக இருந்தாலும் குப்பத்து எம் எல் ஏ என்றெல்லாம் தனியாக இருக்க மாட்டார் smile emoticon அவர் பெரிய பங்களாவில் பாஷ் ஆன ஏரியாவில்தான் குடி இருப்பார். இந்த படத்தில் காட்டுவது போல பேக்கா போல இளித்துக்கொண்டு கவுன்சிலரின் எடுபிடி போல திரிய மாட்டார்.

படத்தின் ஹீரோயின் செம . அவரின் உடைகளும் அவ்வப்போது வலிய பேசும் ” இப்ப இன்னாங்கறே” போன்ற வசனம் மட்டுமே குப்பத்து பெண் போல காட்டுகிறது. அவரின் உடல்மொழி , முக ரியாக்‌ஷன்கள் , சிரிப்பு , பழகும் விதம் எல்லாம் பெசன்ட் நகரில் வசித்துக்கொண்டு , கலாக்‌ஷேத்ராவில் நடனமாடிவிட்டு , கோவாவிற்கு சார்டட் ஃப்ளைட்டில் செல்லும் மென்மையான இதயம் படைத்த எலீட் பெண்மணி போன்றே இருக்கிறது.

டேய் …ஒரு குப்பத்து பெண் மேன்மையான நடை உடை பாவனையுடன் இருக்கக்கூடாதா ? என சீறி எழுந்து பாய்ந்து ஓடி வரப்போகும் போராளிகளின் வசதிக்காக முந்தையா பாரா சேர்க்கப்பட்டுள்ளது.