தஞ்சை ப்ரகாஷ் பகுதி 4

தஞ்சை ப்ரகாஷின் கதைகளைப் படித்த சில நண்பர்கள் அவர் எழுத்து raw -வாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார்கள்.    எம்.ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்றது அது.  என்னால் அதை ஒரு சதவிகிதம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை.  ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அவர் கதைகள் சக எழுத்தாளர்களாலேயே வாசிக்கப்படவில்லை.  ஜி. நாகராஜனுக்குக் கிடைத்த அதிர்ஷம் அவருக்கு இல்லை.  சரியான பதிப்பாளர்கள் இல்லை.  நான் எப்படி உயிர்மை கிடைக்கும் வரை நானே என் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொண்டிருந்தேனோ அதேபோல் அவருக்கும் பதிப்பாளர் கிடைக்கவில்லை.  மேலும் அவர் தன் முனைப்பு கொண்டவராகவும் இல்லை.  ஏராளமான அச்சுப் பிழைகளோடுதான் கதைகள் கிடைக்கின்றன.  மேலும், சரியான முறையில் எடிட் செய்யப்படவில்லை.  மாணிக்கம் என்ற பெயர் ஒரு வாக்கியத்தில் வந்தால் அதே பெயர் அதே வாக்கியத்தில் இரண்டு முறை வருகிறது.  இதையெல்லாம் நீங்களே எடிட் செய்தபடியேதான் வாசிக்க வேண்டும்.  தமிழின் உச்சபட்ச படைப்பாளி – அசோகமித்திரனுக்கும் மேல் – ப. சிங்காரத்துக்கும் மேல் – தமிழில் எழுதிய எல்லா படைப்பாளிகளிக்கும் மேல் – தஞ்சை ப்ரகாஷ் என்பது என் திண்ணமான கருத்து.  அதை நிறுவுவதற்காக என்னால் 200 பக்கம் கூட எழுத முடியும்.  என் ஆகப் பெரிய வருத்தம் என்னவெனில், அவரைப் பற்றிய என் கட்டுரைகளைப் படிக்க அவர் உயிரோடு இல்லாமல் போய் விட்டாரே என்பதுதான்.  அதை நினைத்து நான் வருந்தாத கணம் இல்லை.

படித்துப் பாருங்கள்.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/30/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/article2999865.ece