இன்னும் ஒன்று…

வளன் அரசு முகநூலில் எழுதியது:

 

ஃபூக்கோ மற்றும் பின்நவீனத்துவம் பற்றி சாரு சொல்வது உண்மையிலும் உண்மை…
என் பின்நவீனத்துவ வகுப்பின்போது என்னுடைய பேராசிரியர் என்னைப் பார்த்து வியந்துபோனார். இதை நீ எங்கே கற்றுகொண்டாய் என்று ஒவ்வொருவரும் முறையும் கேட்டார் குறிப்பாக தெரிதா பற்றிய வகுப்பில் பாடம் நடத்தும் போதே தெரிதாவின் சித்தாந்தங்களை விவரித்து அவரை மூக்கில் விரல் வைக்க செய்தேன்.

எல்லாவற்றிற்கும் காரணம் சாருதான். நம் காலத்தில் இப்படி ஒருவருடன் வாழ்வது நம் பெருமை.

அவரைக் கொண்டாடாவிட்டாலும் கஷ்டம் கொடுக்காமல் இருந்தால் போதும். சாரு உருவாக்கிய வாசகர் வட்டம் போல எந்த ஒரு எழுத்தாளரும் இனிமேல் உருவாக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்தளவிற்கு திறந்த உரையாடல்கள் விவாதங்கள் வாசகர் வட்டத்தில் நிகழ்கின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த வாசகர் வட்டத்தின் எழுத்தாளன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறான் அல்லது வாசகர்கள் அவருக்கு அந்த இடத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

சாருவின் எழுத்துகள் நம் வாழ்வை மாற்றும். தொடர்ந்து படிக்க படிக்க ஒரு இனம் புரியாத இன்பம் மனதில் பிறக்கும். இந்த உலகம் பெரிய புதிர் விளையாட்டு களமாகவும் அதில் நீங்கள் பங்கேற்பவராகவும் உணர்வீர்கள்… நான் அப்படிதான் உணர்கிறேன். ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளராக இருப்பது போன்று ட்ரான்ஸ்கிரஸிவ் வாசகனாக இருப்பதும் சவால் தான்.