105 (ஒரு குட்டி பூச்சி)

Dear charu,

I am a student who just completed class 12th.  I am slave to your writing. From my young age I am having a great interest in philosophy.  Can you share your knowledge about the idea of choosing philosophy as a career in India and foreign countries?  Can you recommend a good university for studying philosophy?  And can you recommend some interesting books to improve my knowledge on them?

Yours sincerely

(A slave of your writing)

Aditya sriram

p.s: You are the first writer I have ever written a letter to.

மேற்கண்ட கடிதம் எனக்கு நேற்று கிடைத்தது.  முதல் பார்வையில் யாரோ நம்மைக் கலாய்க்கிறார்கள் என்று நினைத்தேன்.  கடிதத்தின் மேலே காயத்ரி ஸ்ரீராம் என்று இருந்தது.  எல்லாமே தெரிந்த பெயர்கள்.  காயத்ரி என் மாணவி.  ஆதித்யா அவள் மகன்.  ராம் காயத்ரியின் கணவர், என் நண்பர்.  ஆனால் இது என்ன ஸ்ரீராம்.  ஆனால் எது உதைத்தது என்றால், ஆதித்யாவும் சரி, காயத்ரியும் சரி, இப்படி விளையாடக் கூடிய ஆட்கள் இல்லை.  சீரியஸ் டைப்.  அதனால் யார் இது, விளையாடுகிறீரா என்று கேட்டு ஒரு மெயில் போட்டேன்.  இன்று வந்த பதிலில் ஆதித்யா உண்மையிலேயே பனிரண்டாம் வகுப்பு முடித்துள்ள பையன்.  என் புத்தகங்களை தன் தந்தையின் அலமாரியிலிருந்து எடுத்துப் படித்திருக்கிறான்.  தெரிந்து எடுத்தானா, தெரியாமல் எடுத்தானா என்று இனிமேல்தான் கேட்க வேண்டும்.  ஆதம்பாக்கத்தில் இருக்கிறானாம்.

இப்படி பனிரண்டாம் வகுப்பிலிருந்தே என்னைப் படிப்பவர்களில் ஒருவன் வளன் அரசு.  அப்போதிருந்தே என்னை அப்பா என்றுதான் அழைப்பான்.  இப்போது பெரிய ஆளாகி விட்டான்.  அமெரிக்காவில் பாதிரியாருக்குப் பயின்று கொண்டிருக்கிறான்.  தத்துவ இயல் படித்தவன்.  இசையில் அதிக ஆர்வம்.  உண்மையான கிறிஸ்தவன்.  நான் கிறிஸ்தவனாகப் பிறந்திருந்தால் அவனைப் போல்தான் இருந்திருப்பேன்.  சமீபத்தில்தான் கேட்டேன்.  பாதிரியார் என்றால் பிரம்மச்சரியம் பேண வேண்டுமோ என்று.  ஆமாம் என்று பெரிய குண்டைத் தூக்கிக் போட்டான்.  போன் உரையாடல் என்பதால் என் அதிர்ச்சியை அவன் கண்டிருக்க முடியாது.  பாதிரியார் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் போல என்று எப்படி நான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை.  என்ன முட்டாள்தனம்!

வளன் அரசுவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இரண்டு.  இப்போது எழுதவும் செய்கிறான்.  இன்னொன்று, பதினைந்தில் என்னிடம் வருபவர்கள் இருபத்தைந்தில் காணமால் போய் விடுவார்கள்.  ஆனால் வளன் எப்போதும் இருப்பான்.  இருக்கிறான்.

இப்போது ஆதித்யாவுக்கு வருவோம்.  என் எழுத்துக்கு அடிமையாகி விட்டான்.  இப்படித்தான் நான் அசோகமித்திரனிடம் சொல்லியிருக்கிறேன்.  போகட்டும்.  அவன் கேட்டிருக்கும் கேள்வி.  இந்தக் காலத்தில் இளைஞர்கள் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களே எளிதில் கண்டு பிடித்து விடக் கூடிய பதில்களை என்னிடம் கேட்கிறார்கள்.  அது ஆச்சரியம் அளிக்கிறது.  கூகிளில் கிடைக்கக் கூடியதையெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள்.

ஐஐடியில் HSS என்று ஒரு துறை உள்ளது.  Department of Humanities and Social Sciences.  இதற்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.  எழுதினால் ஐந்து ஆண்டு எம்.ஏ. பட்டம் படிக்கலாம்.  இந்த நுழைவுத் தேர்வுக்கு என்ன படித்திருக்க வேண்டும், பிஏவா, ப்ளஸ் டூவா என்று எனக்குத் தெரியாது.  ஆனால் ஐஐடியில் தத்துவம் படித்தால் பெரிய அளவில் முன்னேறலாம்.  தத்துவம் படித்தால் உருப்பட முடியாது என்று நான் சொன்னது, கல்வித் துறை மூலமாக அல்ல.  ஒரு ஃப்ரீலான்ஸ் தத்துவவாதியாக.  அதுவும் தமிழ்நாட்டில்.  கல்வித் துறையில் தத்துவம் படித்தால் – கவனி, சென்னை பச்சையப்பா கல்லூரியிலோ மாநிலக் கல்லூரியிலோ அல்ல – ஐஐடியில் படித்தால் பெரிய அளவில் ஆள் ஆகலாம்.  அல்லது, ஜேஎன்யூவில் தத்துவம் படிக்கலாம்.  ஐஐடியில் தத்துவம் படித்தவர் என் பழைய நண்பர் ரமேஷ்.  நாகார்ச்சுனன் என அறியப்பட்டவர். 

மற்றபடி என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நீயே தேடிக் கண்டு பிடித்துக் கொள்ளலாம்.  எல்லோரும் செய்வது முற்கால கிரேக்க தத்துவவாதிகள்.  அப்படித்தான் நான் செய்தேன்.  ஆனால் கூடவே பௌத்தமும் கற்றேன்.  இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை அதுதான் என் கல்வி.  துறை சாராக் கல்வி என்பதால் லௌகீகமாகப் பயன் தரவில்லை.  இருபத்தைந்து வயதுக்கு மேல் ஃப்ரெஞ்ச் தத்துவம் போய் விட்டேன்.  இதையெல்லாம் கல்வித் துறை சார்ந்து செய்திருந்தால் எழுத்தாளனாகவும் இருந்து கொண்டு லௌகீகமாகவும் நன்றாக இருந்திருக்கலாம்.  தெரியவில்லை.  ஆனால் துறை சார்ந்து போயிருந்தால் இப்படி எழுத்தாளனாக ஆகியிருக்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது.  ஏனென்றால், என் வயதில் துறை சார்ந்து சென்ற என் நண்பர்கள் அனைவருமே எழுத்தாளராக உருப்படவில்லை.  இப்போது சாஹித்ய அகாதமியிலெல்லாம் தலைவராக அமர்ந்திருக்கிறார்கள். 

ஐஐடி ஃபிலாஸஃபி நுழைவுத் தேர்வை கொரோனா காரணமாக ஒத்திப்போட்டிருக்கிறார்கள்.  இன்னொரு விஷயம், ஐஐடிகளிலேயே ஃபிலாஸஃபி படிக்க உகந்தது என்று தில்லி ஐஐடி என்று நினைக்கிறேன். நீயும் அப்பா மூலம் விசாரித்துப் பார். உனக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைசக்தியைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai