அசோகா : வெளிவர இருக்கும் புதிய நாவல்

அதிக பட்சம் இன்னும் மூன்று மாதங்களில் வெளிவந்து விடும், நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் அசோகா என்ற புதிய நாவல். இது பற்றி குமுதம் இதழில் எழுதியிருக்கிறேன். இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்த கட்டுரை இது. பொதுவாக குமுதத்தில் எழுதுவதை என் தளத்தில் வெளியிட மாட்டேன். விதிவிலக்காக, இது என் புதிய நாவல் பற்றிய அறிவிப்பாக இருப்பதால் வெளியிடுகிறேன். குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி. எனவே இந்த மூன்று மாதங்களில் என்னை எந்தப் பணியிலும் ஈடுபடுத்தாதீர்கள் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலுக்காக ஏராளமான வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கிடையில்தான் இசை பற்றிய கட்டுரையை வாரம் ஒருமுறை எழுதிக் கொண்டிருக்கிறேன். கீழே இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்த கட்டுரை.

அசோகா.  நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல்.  சுமாராக முன்னூறு பக்கங்கள் இருக்கும்.  இதற்காகவே 2000 ஆண்டுகளுக்கு முன் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களையும் ஆவணங்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். 

பாடப் புத்தகங்களில் நாம் படித்த அசோகரின் வரலாறு நிஜமான வரலாறு அல்ல.  அது இட்டுக்கட்டப்பட்ட கதை.  இட்டுக் கட்டியது அசோகரேதான்.  அதையே நாம் வரலாறாக எடுத்துக் கொண்டோம்.  அசோகருக்கும் மற்ற மன்னர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், அசோகர் தன்னைப் பற்றி எழுதி வைத்தார்.  எக்கச்சக்கமாக எழுத வைத்தார்.  அதையெல்லாம் படித்தால் ஒரு நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.  அவரா எழுதினார்?  அவர் சொல்லச் சொல்ல அவரது பணியாட்கள் கல்வெட்டுக்களில் பொறித்தார்கள்.  பாலி, சம்ஸ்கிருதம், கிரேக்கம், அராமிக் ஆகிய நான்கு மொழிகளில் எழுதினார்.  அந்தக் காலத்தில் கிரேக்க மொழி இப்போதைய ஆங்கிலம் போல் இந்தியா முழுவதும் புழங்கி இருக்கிறது.  அராமிக் இயேசு பேசிய மொழி.  புத்தரின் அஹிம்சை பற்றிய கோட்பாடுகளும் அந்தக் காலத்தில் இஸ்ரேல், ரோம் வரை இந்தியாவிலிருந்து சென்றிருக்கிறது.  மிக அதிகமான அளவில் கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாச்சார, வர்த்தகப் போக்குவரத்து இருந்திருக்கிறது.  அதனால் இயேசு மிக நன்றாகவே புத்தரின் அகிம்சைக் கோட்பாட்டை அறிந்திருந்தார்.  இது பற்றி ஆங்கிலத்தில் பல ஆய்வு நூல்கள் வந்துள்ளன. 

அசோகரின் கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பிரச்சாரமும் 10 சதவிகிதம் உண்மையும் இருப்பதைக் காண முடிகிறது.  பிரச்சாரம் என்றால் பொய் என்று அர்த்தம் அல்ல.  திரிக்கப்பட்ட உண்மை.  ஒரு உதாரணம் சொல்லலாம்.  உலகிலேயே மத அடிப்படையிலான நாடு என்று அறிவித்த முதல் மன்னர் அசோகர்தான்.  அசோகரின் தாத்தா சந்திரகுப்த மௌரியர் சாணக்கியனின் உதவியோடு முதல் மௌரியப் பேரரசை நிறுவியதை நாம் அறிவோம்.  ஆனால் சந்திரகுப்தர் தன் அரசை இந்து அரசாக அறிவிக்கவில்லை.  அவரது ஆட்சியில் எல்லா மதத்தினரும் சகஜமாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்தனர்.  உண்மையில் அவர் காலத்தில்தான் மத சகிப்புத்தன்மை நடைமுறையில் இருந்தது.  பௌத்தர், சமணர், அஜிவிகர், இந்து ஆகிய நான்கு மதங்கள் பெரிய அளவில் இருந்தன.  அஜிவிகர் என்பவர்கள் நாத்திகர்கள்.  இந்துக்களை அப்போது பிராமணர் என்றே அழைத்தனர்.  ஆனால் சந்திரகுப்தர் என்ன தப்பு செய்து விட்டார் என்றால், இந்த மத நல்லிணக்கத்தைப் பற்றிக் கல்வெட்டுகளில் எழுதி வைக்கவில்லை.  அசோகர் ஊருக்கு ஊர் கல்வெட்டில் எழுதி வைத்துப் பெயரைத் தட்டிக் கொண்டு விட்டார். 

அசோகர் கல்வெட்டில் எழுதியதில் பத்து சதவிகிதம்தான் உண்மை.  அது கூட சந்தேகம்தான்.  ஏனென்றால், “எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமை சமமாக இருக்க வேண்டும்” என்று கல்வெட்டில் எழுதியிருப்பார்.  ஆனால் அஜிவிகர்கள் புத்தர் பற்றி கேலிச் சித்திரம் எழுதுவார்கள்.  அவர்கள் நாத்திகர்கள்தானே?  அதனால் எல்லோரையும் விமர்சிப்பதுதான் அவர்களின் வேலை.  என்ன விமர்சித்தார்கள் தெரியுமா?  அதற்கு நாம் கொஞ்சம் புத்தருக்குள் போக வேண்டும்.  வாழ்க்கை துக்கம் நிரம்பியது.  இதுதான் பௌத்த சிந்தனையின் துவக்கப் புள்ளி.  துக்கத்தின் காரணம் ஆசை.  ஆசையை ஒழித்து விட்டால் பிறவிப் பெருங்கடலில் நீந்தி நீந்தியே யுகங்களைக் கடக்க வேண்டிய அவசியம் இருக்காது.  பிறவியே இல்லாத பேறு கிடைக்கும்.  என்ன அர்த்தம்? ஆசையை விட்டு விட்டால், திரும்பத் திரும்பப் பிறந்து, திரும்பத் திரும்ப துக்கத்தில் விழுந்து திரும்பத் திரும்ப முதுமையையும் மரணத்தையும் சந்தித்து துன்ப சாகரத்திலேயே வீழ்ந்து கிடக்க வேண்டாம்.  ஆசையை விட்டால் பிறவியிலிருந்து விடுதலை.  அதுவே மோட்சம். 

இங்கே அஜிவிகர் எடுத்த எடுப்பில் கட்டையைப் போடுகிறான்.  எவன் ஐயா உமக்கு வாழ்க்கை துக்கம் என்று சொன்னது?  நீர் ஜாலியாக அரண்மனையில் வாழ்ந்தீர்.  திடீரென்று ஒருநாள் நோயாளியையும் கிழவனையும் சவத்தையும் பார்த்து மிரண்டு போய் ஐயோ துக்கம் ஐயோ துக்கம் என்று கதறியபடி காட்டுக்கு ஓடி விட்டீர்.  முதுமையையும் மரணத்தையும் துக்கம் என்று யார் சொன்னது?  ஒரு இலை பழுத்துத் தரையில் விழுவதைப் போல (இதை பிராமணர்கள் சரியாகவே சொல்லி விட்டார்கள், அதற்காக அவர்களை மெச்சத்தான் வேண்டும்) மனிதர்கள் முதுமை அடைந்து சாகிறார்கள்.  இதில் எங்கே ஐயா வந்தது துக்கம்?  நிலவைப் பாரும்.  உம்முடைய குழந்தை ராகுலைப் பாரும்.  அதுதான் நடக்கவே இல்லையே.  குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் குழந்தை பிறந்த அன்றே ஓடி வந்து விட்டீரே?  சரி, நீர் ஆசை ஆசையாக வளர்த்த அந்த வெண்புரவி காந்தகாவைப் பார்த்தீரா?  நீர் உம்முடைய மனைவி யசோதராவையும் ராகுலனையும் விட்டு விட்டு அரண்மனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி உம் வேலைக்காரன் சன்னாவோடு ஓடி வந்த இரவு அநோமா நதிக்கரையில் வைத்து உம் ஆயுதங்களையும் தலைமுடியையும் அவனிடம் கொடுத்து விட்டு என்ன சொன்னீர்? ”இந்த இரண்டையும் என் தந்தையிடம் கொடு. முதுமையையும் மரணத்தையும் வெல்ல என்ன வழி என்ற ஞானத்தைத் தேடிக் காட்டுக்குப் போகிறேன்.  ஞானத்தை அடையவில்லை எனில் காட்டிலேயே என் உடல் செத்து அழுகிப் போகும்.  ஞானத்தை அடைந்து விட்டேன் என்றால் நிச்சயம் திரும்பி வருவேன்” என்று நீர் சொன்னபோது என்ன நடந்தது என்று உமக்குத் தெரியுமா? ”ஞானம் கிடைக்காவிட்டால் செத்து விடுவேன்” என்ற வார்த்தைகளைக் கேட்டு உம்முடைய வெண்புரவி காந்தகா உம் பாதங்களைத் தன் நாவால் நக்கிக் கண்ணீர் விட்டது. 

உமக்கு ஞானம் கிடைத்தது. திரும்ப அரண்மனைக்கு வந்தீர்.  என்ன பெரிய ஞானி என்று கேலி பேசினார் உம் தந்தை.  அப்போது நீர் என்ன செய்தீர்?  ஒரு சாதாரண மந்திரவாதியைப் போல் தரையிலிருந்து முப்பது அடி பறந்து போய் உம் கால்களிலிருந்து தண்ணீரையும் தோள்களிலிருந்து நெருப்பையும் வரச் செய்தீர்.  இதைத்தான் கிரேக்கத்திலிருந்து வந்த எத்தனையோ மந்திரவாதிகள் செய்து காண்பிப்பார்களே?  ஆனாலும் உம்முடைய வித்தைக்கு அரண்மனையில் மதிப்பு இருந்தது.  ஒன்றும் தெரியாத நம்முடைய பயல் இவ்வளவு பெரிய ஆளாகி விட்டானே என்று உம் காலில் விழுந்தார் உம் தந்தை.  உம் வேலைக்காரன் சன்னாவும் உம் சங்கத்தில் சேர்ந்து பெரிய அரஹாத்தா ஆனான்.  சும்மா இருந்தானா?  ஏதோ அவன் தான் உமக்கு ரொம்ப நெருக்கம் போல் காண்பித்துக் கொண்டு மற்ற பிக்குகளுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான்.  நீர் இருந்தபோதே இந்த கதி என்றால் இன்னும் சொச்ச காலத்தைப் பற்றிச் சொல்லப் போவானேன்?

சரி, இந்தச் சம்பவத்தை எதற்கு இங்கே சுட்டிக் காண்பித்தோம் என்றால் நீர் அரண்மனையை விட்டு ஓடிய அன்று, அநோமா நதிக்கரையில் உம்முடைய தகாத வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணீர் விட்ட உம் புரவி காந்தகா நீர் காட்டுக்குள் மறைந்ததுமே இறந்து போனது. அந்த அன்புக்கு ஈடு இணை உமது ஞானத்தில் உண்டா? சன்னா புரவி இல்லாமல் அன்று நடந்தேதான் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.  நாங்கள் கடவுளை நம்பவில்லை.  சொர்க்கமும் நரகமும் நாமே இந்தப் பூமியில் சிருஷ்டிப்பவைதான்.  ஆனாலும் ஒரு பேச்சுக்கு சொர்க்கம் இருக்கிறது, அங்கேதான் நீரும் இப்போது இருக்கிறீர் என்று வைத்துக் கொண்டால் உம்முடைய கணுக்காலின் அருகே குனிந்து பாரும், இன்னமும் அந்தக் காந்தகா விட்ட கண்ணீரின் கறை அங்கே இருந்துதான் தீரும்.  நீர் எவ்வளவு தவம் பண்ணினாலும் அந்தக் கறையைத் துடைத்து விட முடியாது.

அன்றைய தினம் பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா) அஜிவிகர்களின் குழு ஒன்று மேற்கண்டவாறு ஒரு சுவடியில் எழுதி தெருவுக்குத் தெரு வாசித்த செய்தி அசோகரின் காதுகளை எட்டியது.  மந்திரியை அழைத்தார்.  நம்முடைய பாடலிபுத்திர மாகாணத்தில் எத்தனை அஜிவிகர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடும் என்றார்.  மொத்தம் 18000 பேர்.  ஒரே நாளில் அத்தனை பேரின் தலைகளும் வெட்டப்பட்டன.  இதுதான் அசோகரின் மத சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம். ஐயோ, நாவலிலிருந்து ஒருசில பக்கங்களையே எடுத்துக் கொடுத்து விட்டேன்.  தப்பான காரியம்.  நாவல் பெயர் அசோகா என்று இருந்தாலும் நாவலில் இன்னொரு ஹீரோவும் உண்டு.  குணாளன்.  அசோகனின் மகன்.  நாவலில் அவனுடைய பகுதிதான் அதகளம்.  ஒரு வில்லி கதாபாத்திரமும் உண்டு.  த்ரிஷா.  நிஜமாகவே அதுதான் பெயர்.  பாலி மொழியில் ர என்ற எழுத்தோ உச்சரிப்போ கிடையாது என்பதால் திஷ்யா என்பார்கள்.  நாவலை எழுதிக் கொண்டிருக்கும்போதே அது ஒரு திரைப்படத்தைப் போல் விரிவதைப் பார்த்து திரைக்கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  (வெற்றிமாறனோ மணி ரத்னமோ எடுத்தால் ரகளையாக இருக்கும்.  பார்ப்போம்!) இதையெல்லாம் பார்த்து இதை ஒரு சரித்திர நாவல் என்று நினைத்தீர்களானால் அதுவும் கிடையாது.  நாவலில் பாதி நிகழ்காலத்தில் நடக்கிறது!  இன்னொரு முக்கியமான விஷயம், நாவலில் ஒரு கெட்ட வார்த்தை கிடையாது.  சின்னப் பொடியர்களிலிருந்து முதியோர் வரை எல்லோரும் படிக்கலாம். மூன்று மாதம் பொறுத்திருங்கள்.   

பொதுவாகவே மனித இனத்துக்கு வழிபாட்டு நாயகர்கள் தேவைப்படுகிறார்கள்.  சினிமா, அரசியல், இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் அந்தத் தேவை இருக்கிறது.  சினிமாவில் அந்த வழிபாட்டு பிம்பத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.  ஆரம்பத்தில் தியாகராஜ பாகவதர், பிறகு எம்ஜியார், பிறகு ரஜினி.  சமூகத்தின் கசடுகளை விமர்சனம் செய்ய வேண்டிய இலக்கியத் துறையில் கூட இந்த பிம்ப வழிபாடு இருப்பதுதான் ஆச்சரியம்.  யாரையாவது தூக்கி பீடத்தில் அமர்த்தி வைத்து மாலை போட்டுக் கொண்டாடினால்தான் திருப்தி.  இது ஆங்கிலத்தில் வாசிக்கும் மேட்டுக்குடியினரிடம்தான் அதிகம் காணப்படுகிறது.  இந்தப் பத்திக்கும் மேலே சொன்ன அசோகர் கதைக்கும் என்ன சம்பந்தம்?  இருக்கிறது.  மீண்டும் படித்துப் பாருங்கள்.    

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai