145. கேரளமும் தமிழ்நாடும்: அராத்து

கீழே வரும் பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நான் எழுதியதாகவே உணர்கிறேன். பத்து மற்றும் பதினோராவது வரியைத் தவிர. கனிந்து விட்ட பிறகு அப்படியெல்லாம் எழுதுவது முறையல்ல. அராத்து அந்த நிலைக்கு வர இன்னும் காலம் இருக்கிறது. கட்டுரையில் அராத்து குறிப்பிடும் அபிலாஷின் கட்டுரையை இதைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்கிறேன். உண்மையில் அபிலாஷைப் படித்து விட்டுத்தான் இதைப் படிக்க வேண்டும். அப்படியே செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இனி அராத்து:

கேரளாவில் இலக்கியப் பண்பாட்டு சூழலை ஒட்டி அபிலாஷ் எழுதப் போக , பலரும் கேரளாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார், ஷகிலாவை கொண்டாடியவர்கள் சேட்டன்கள் என்ற ரேஞ்சிக்கு தடாலடி அவதாரம் எடுக்கிறார்கள். காலச்சக்கரத்தை கொஞ்சம் சில நாட்கள் பின்னால் நகர்த்தினால் இவர்கள்தான் மலையாள சினிமாவை தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடியது தெரியவரும்

நானும் சாரு ஆரம்பத்தில் கேரளா பற்றி எழுதியதைப் படித்து , அங்கே எல்லாரும் இலக்கிய வாசகர்கள் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். சந்திக்கும் சிலரிடம் பேசிப்பார்த்தால் , ஸக்கரியாவா யார் அது என்றே என்னிடம் கேட்டு ஷாக் கொடுத்தனர் மலையாள இளம் பெண்கள். (கேரள ஆண்களிடம் எவனாவது பேச்சு வைத்துக்கொள்வானா ?)அபிலாஷ் சொன்னதை இப்படி சுருக்கமாக புரிந்து கொள்ளலாம்.ஒப்பீட்டளவில் தமிழகத்தை விட கேரளா வாசிப்பிலும் (ஏதோ ஒரு எழவு) இலக்கிய பரிச்சியத்திலும் , எழுத்தாளர்களிடம் மரியாதையாக இருப்பதிலும் ஒரு படி மேல். அவ்வளவுதான். ஆனால் அந்த ஒரு படி மேல் என்பது மிகப்பெரிய வித்தியாசத்தை வழங்குகிறது. சென்னையில் மலையாளி நடத்தும் ஒரு டீக்கடையில் என் பொண்டாட்டி புத்தகத்தை விற்பனைக்கு வைக்கிறார்கள். சும்மா ,”வச்சிட்டுப் போ …” என்றெல்லாம் சொல்லாமல் ,மரியாதையாக வாங்கி வைத்தார்கள். அந்த டீ மாஸ்டர் பெரிய இலக்கிய வாசிப்பாளர் அல்ல. ஆனால் வாசிப்பு பற்றியும் எழுத்து மற்றும் எழுத்தாளர் பற்றியும் ஒரு மரியாதையான பிம்பம் இருக்கிறது. அவர் ரேஞ்சுக்கு அவர் சில நாவல்கள் , எழுத்தாளர்களைச் சொன்னார். தமிழ்நாட்டில் 5000 பேர் இலக்கியம் படித்தால் , கேரளாவில் 15000 பேர் படிப்பார்கள். இது அரித்மேட்டிக் அளவில் பெரிய வித்தியாசம் இல்லைதான். ஆனால் அறிவுச் சூழலிலும் பண்பாட்டுச் சூழலிலும் அங்கே இந்த வித்தியாசத்தை உணர முடிகிறது. அதற்காக கேரள அரசுப் பேருந்து ஓட்டுபவர் தகழியைப் படித்துக் கொண்டே ஓட்டுகிறாரா என்று கேட்கக் கூடாது !மனுஷ் பல விஷயங்களில் சென்ஸிபி:ளாகவும் நுட்பமாகவும் பேசியும் எழுதியும் பார்த்திருக்கிறேன். இப்போது சிவகார்த்திகேயன் சிரித்தார். அஜீத்தும் விஜய் யும் நான் வந்தால் எழுந்து நின்று கும்பிடுவார்கள் என்று எழுதுகிறார்.படித்ததும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி விட்டது. அவர் எழுதியதில் எந்த அர்த்தப் பிழையும் இல்லை. மனுஷ் போனால் அஜீத் & விஜய் எழுந்து நிற்பார்கள்தான். வணக்கம் வைப்பார்கள் தான். அவர்கள் ஹெச் .ராஜா , பட்டிமன்ற ராஜா , டி.ராஜா , என யார் போனாலும் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். ஜோதிட சிகாமணி வரக்கூர் ராஜா , மூக்கால் புல்லட் இழுத்த சேர்ந்தமங்கலம் ராஜா போனாலும் இதேதான். இன்னும் கேட்டால் மூக்கால் இழுத்த ராஜாவை கட்டி அணைத்து இன்னும் சாதிக்கணும் என வாழ்த்துவார்கள். இன்னும் உங்களுக்குப் புரியும்படி (உங்களுக்கா புரியாது !) சொன்னால் மாரிதாஸ் போனாலும் , டிவியில் கத்தும் யார் போனாலும் இதே மரியாதை கொடுப்பார்கள். பணிவின் சிகரங்கள் அல்லவா அவர்கள் ? இந்தப் பணிவுதானே அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியது ? அதை எப்படி அவர்களால் விட முடியும் ?தேவதச்சன் டிப் டாப்பாக இன் ஷர்ட் செய்து கொண்டு க்ளீன் ஷேவ் உடன் இருப்பார். அவர் போனாலும் எழுந்து வணக்கம் வைப்பார்கள். தேவதேவன் போனால் எதோ விவசாய சங்கத் தலைவர் என்று மரியாதை செலுத்துவார்கள். அவர்களுக்கு வணக்கம் போட தேவதச்சனும் தேவதேவனும் யார் என்றே தெரிந்திருக்க வேண்டியதில்லை. தேவதச்சன் கவிதை எழுதறேங்க என்று சொன்னால் , நல்லா எழுதுங்க , இன்னும் நிறைய எழுதுங்க , பெருசா பண்ணுங்க , உங்களால முடியும் என்று மோட்டிவேட் செய்தும் அனுப்புவார்கள். அவர்கள் ஒரு மாதிரி வெள்ளந்தியாக அப்பாவியாக வளர்ந்து விட்டார்கள். அவர்கள் மேல் எந்த புகாரும் இல்லை. கமல் இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிறீர்கள். மம்முட்டி என்றாவது சிறுகதை எழுதி பஷீரிடம் கொடுத்து இருக்கிறாரா? அந்தத் தைரியம் மம்முட்டிக்கு வருமா ?இந்த இடத்தில்தான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான அந்த சின்ன வித்தியாசம் வருகிறது. ஞானக்கூத்தனை மேடையில் வைத்துக்கொண்டு கமல் சென்னை புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய கவிதையை வாசித்தார் (எத்திராஜ் கல்லூரி). இதுதான் இலக்கியவாதிகளுடனான தொடர்பா ?அதேபோல கேரளாவில் மம்முட்டி மோகன்லால் ஒரு எழுத்தாளரை சந்தித்து விட்டதாலேயே அவர்கள் அவர்கள் காலை நக்கிக்கொண்டு பின்னாலேயே ஓட மாட்டார்கள். தாங்கள் கற்ற எழுத்து வித்தையை வைத்து அவர்களைப் போற்றிப் புகழ மாட்டார்கள். அதுவும் இங்கே ரிவர்ஸ் ஆக நடக்கிறது. பரோட்டா சூரி தடுக்கி விழுந்து ஒரு எழுத்தாளரை சந்தித்து விட்டால் “சூரி- உலகில் எப்போதாவது தோன்றும் அதிசயக் கலைஞன் “ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்து விடும். அது உங்கள் மூலம் வந்துவிட வேண்டாம் என்று ஒரு நொப்பாசை மனுஷ். இதுதான் பண்பாட்டு வீழ்ச்சி , கலாச்சார கேவலம். எழுத்தாளர்களே இப்படி இருந்தால் பாவம் காமன் மேர் என்ன செய்வார் ? இந்த வாழ்க்கை முறையும் , பண்பாட்டு கலாச்சார சூழலையும் தமிழ் சினிமா உருவாக்கி வந்திருக்கிறது. நான்கு தலைமுறைகளாக இதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் தமிழர்கள். தமிழ் சினிமா உருவாக்கிக் கொடுத்த அந்த ரொமாண்டிசைஸ் வாழ்க்கை முறையில் இருந்துதான் எழுத்தாளனும் உருவாகி வருகிறான். என்னதான் நான் எழுத்தாளன் , ரௌடி , கலகன் , பருப்பு என சீன் போட்டாலும் ,”தேரில் வந்த தெய்வமே , தேவ பந்தமே “ என்ற பாடல் வரிகள் கேட்டால் அழுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். கேட்டால் , ஆமாம் நான் அழுவேன் தான் என்று சொல்கிறார்கள். இந்த வரிகளுக்கு நீங்கள் அழுங்கள் , பிரச்சனையே இல்லை. ஆனால் இதற்கு அழுது கொண்டு ஏன் “அக்னி “ “கரும்புனல் “ “மீட்பு “ “எழுச்சி” “விழுமியங்கள் “ என ஜில்காவாக எழுதி பாவப்பட்ட சிறு மைனாரிட்டி மக்களை மெண்டலாக்குகிறீர்கள் ?காம பானம் பாய்வதால் காயமாகுமேகலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்மலர்ந்த தேகம் சிவந்து போகும்.இதே போல ஜாலியாக எழுதி விட்டுப் போகலாமே ? சிவந்த தேகம் சிநேகம் தேடும்சிநேகம் அங்கே சரசம் ஆடும்சரசம் முடிவில் சரிந்து போகும் எங்கே என் ஜீவனே உன் யோனியில் கண்டேனே என்று முடித்து விட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு போகலாமே !இந்த எங்கே என் ஜீவனே பாடல் போலத்தான் மொத்த தமிழ் வாழ்க்கையும் இருக்கிறது. இந்த பாடல் வரிகள் சுத்தத் தமிழ் செவ்வியல் தமிழ் போல எழுதப்பட்டு இருக்கும். இப்போதும் நிறைய தமிழர்கள் இதை சங்க கால கவிதை என்றே நம்புவார்கள். இதில் கமல் கோட் , டீ ஷர்ட் போட்டு ஆடிக்கொண்டு இருப்பார். அம்பிகா புடவையையே விசித்திரமாகக் கட்டிக்கொண்டு கால் மரத்துப் போனது போல ஏதோ செய்து கொண்டிருப்பார். லிப் கிஸ் அடிக்கும் போது முந்தானையால் மறைத்துக்கொள்தல், செட் போட்ட மாளிகை , ஜிகினா டிரஸ் , ஒளிரும் டிஸ்கோ விளக்குகள் , 8 அம்பிகா , 8 கமல்ஹாஸன் , டிஸ்கோ ஸ்டெப்புகள் , அன்னை போல காப்பேன் என்னும் வரி வருகையில் புட்டத்தைப் பிடித்து ஆர்கஸம் அடைதல் என ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையை (சமீபகாலமாக ) இந்த ஒரு பாட்டே குறியீடாகக் காட்டியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதைப்போன்ற பாடல்கள் வரும் சினிமாப் படங்களின் பாடல் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் அக்காக்களை நான் அறிவேன். அந்த பாடல் புத்தகங்கள் 30 காசு என்று நினைப்பு. அதை இப்போதைய எழுத்தாளர்களும் வாங்கிப் படித்து இருக்கக் கூடும். அவர்கள் கூடவே புதுமைப் பித்தனையும் , சுந்தர ராமசாமியையும் , நகுலனையும் , ப.சிங்காரத்தையும் ,பாரதியாரையும் , அசோகமித்திரனையும் , ஆதவனையும் படித்து இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பாடல் புத்தகங்கள்தான் தமிழர்களின் பண்பாடு , கலாச்சாரம் , என்று தோன்றியிருக்கிறது. அதை அவர்கள் வெளிப்படையாக வெள்ளந்தியாகச் சொல்லும் போது நாம் என்ன செய்ய முடியும் ?காமன் மேர் என்றால் கோபித்துக்கொள்கிறார்களே, அதே ஒரு காமன் மேர்தான் என்னிடம் இதை தனிப்பட்ட உரையாடலில் சொன்னார் – “ சாக்கடையில் இருந்து பழக்கப்பட்ட பன்னிக்கு அது சாக்கடைன்னே தெரியாது. அது சாக்க்டையை சப்போர்ட் பண்ணித்தான் பேசும். வெளில இழுத்தா கடிக்கும். அதுக்கு அது நல்ல வாசமாத்தான் இருக்கும். கொஞ்சம் வெளில வந்து கஷ்டப்பட்டு கொஞ்ச நாள் சாக்கடையில இல்லாம இருந்து பாத்தாதான் , அந்த சாக்கடை வாசம் நாத்தம்னே தெரியும் “ என்றார். எங்கே என் ஜீவனே ….உன் யோனியில் கண்டேனே ….உன் யோனியில் கண்டேனே !