சூரரைப் போற்று

சும்மா ஒரு ஜாலிக்காக சூரரைப் போற்று பார்க்க ஆரம்பித்தேன். மூணு நிமிடம் ஆகியிருக்கும். அந்த மூணு நிமிடத்திலேயே மரண கப்ஸா. அப்படியெல்லாம் விமானம் இறங்குவதற்கு மறுக்க மாட்டார்கள், உலகின் எந்த மூலையிலும். அடுத்து ரயில் காட்சி. எல்லோரும் அந்தக் காலத்து சபா நாடகம் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் தொண்டை வரள கத்தியிருப்பார்கள் போல. காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். அடுத்து நடிகவேள் கருணாஸ் ஒரு பிராமணரைக் கேலி பண்ணுவது போல் பிராமண பாஷை பேச ஆரம்பித்ததும் குமட்டிக் கொண்டு வர படத்தை நிறுத்தி விட்டேன்.

கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகம் படித்தேன். நான் படித்த மறக்கவே முடியாத புத்தகங்களில் அது ஒன்று. தமிழ்க் கலாச்சாரத்தின் ஃபிலிஸ்டைன் தன்மைக்கும் கன்னட கலாச்சார சூழலுக்குமான வித்தியாசத்தை அந்த நூலையும் காதில் பூ சுற்றும் இந்தத் தமிழ்ப் படத்தையும் வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஐம்பதுகளில் வந்த படங்களில் கூட இவ்வளவு அமெச்சூர்த்தனங்கள் இருக்காது.