169. விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் கவிதைகள்

எனக்கு ஆசிய நாடுகளின் – அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் யாரையுமே தெரியாது.  இந்தோனேஷியாவில் Garin Nugroho என்ற இயக்குனர் பற்றி மட்டுமே தெரியும்.  அவரது The Poet என்ற அற்புதமான படத்தைப் பற்றி பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன்.  இப்போது விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (Sapardi Djoko Damono) கவிதைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அற்புதமான கவிதைகள்.  மிகத் தேர்ந்த மொழிபெயர்ப்பு.  தமிழ் மொழிபெயர்ப்பு என்றாலே காத தூரம் ஓடுபவன் நான்.  அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்றால் கேட்கவே வேண்டாம்.  அது ஒரு அகோரி நாடகம்.  பயங்கரம்.  ஆனால் விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று சொன்னால் மொழிபெயர்ப்பு தோற்று விட்டது என்று பொருள்.  மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு போலவே இருக்கக் கூடாது.  அதுதான் சிறந்த மொழிபெயர்ப்பு.  இந்தக் கவிதைகள் தமிழிலேயே கருக்கொண்டு எழுதப்பட்டது போல் உள்ளன.  என்னுடைய  கண்ணீர்த் துளி  இமைப்பீலிகளின் சலனத்தால் நடுங்குகிறது என்று எழுதுகிறான் மீர்ஸா காலிப்.  உர்தூ மொழியின் இரண்டு இணையற்ற கவிகளில் ஒருவன்.   கவி மனமும் அப்படிப்பட்டதுதான்.   அப்படியான ஒரு அற்புதமான கவிஞனை அறிமுகப்படுத்தியதற்காக விருக்‌ஷனுக்கு என் பாராட்டுகள்.  கவிதைகளை கீழ்க்காணும் தளத்தில் வாசிக்கலாம். 

 

http://saptharegai.blogspot.com/?m=1

விருக்‌ஷனின் தளம்:

http://sitrilvirukshanwritings.blogspot.com/?m=1