பூச்சி 137: ரிஷப ராசி

சின்ன வயதிலிருந்தே – சுமார் பத்து வயதிலிருந்து – ஜோதிடர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு.  நான் கொஞ்ச காலம் நாஸ்திகனாக இருந்த போது கூட ஜோதிட நம்பிக்கையைக் கைவிடவில்லை.  ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரத்தை மட்டும் ஒருபோதும் செய்ததில்லை.  கதை கேட்பது போல் கேட்டுக் கொள்வேன்.  பல மறக்க முடியாத அனுபவங்கள்.  எல்லாவற்றையுமே அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.  இரண்டு பேரை எந்நாளும் மறக்க இயலாது.  ஒருவர் வேங்கைவாசல் கிராமத்தில் இருப்பவர்.  வயதானவர்.  ஜோதிடத்தாலேயே கோடீஸ்வரர் ஆனவர்.  தெருவில் க்யூவே … Read more

பாவ மன்னிப்பு – சாதனா சகாதேவன்

சமீப காலத்தில் இப்படி ஒரு கதையைப் படித்ததில்லை. அற்புதம். மனித வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத சிடுக்குகளை மகத்தான கதைசொல்லல் மூலம் கலையாக்குகிறார் சாதனா. தொடர்ந்து ஒருவர் இப்படி இதே மாதிரியான கதைகளை வலு குறையாமல் எழுதிக் கொண்டே இருப்பது எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கிய மேதைகளின் வாரிசு இவன். படித்துப் பாருங்கள்.

நிலவு தேயாத தேசம்

பொதுவாக என் பயணக் கதைகளை நாவலோடு இணைத்து விடுவது வழக்கம். என் பாரிஸ் பயணம் ராஸ லீலாவில் உள்ளது. மற்ற இமாலயப் பயணம் கொஞ்சமாய் எக்ஸைலில் உள்ளது. ஆனால் துருக்கி பயணத்தை அப்படிச் செய்யவில்லை. தனியாகவே அந்திமழையில் தொடராக எழுதினேன். மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட நூல் அது. அது பற்றி அக்னி பிரஸாந்த் தன் முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. நிலவு தேயாத தேசம் நான் படித்த முதல் பயண நூல். மேலும்  … Read more

136. அடியேனின் முதல் கடிதம், முதல் கதை…

இன்னும் இந்த வணிக எழுத்து விஷயம் கையை விடாது போல் தெரிகிறது.  சுஜாதாவைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் சுஜாதா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  சுஜாதாவுக்கு அது வசதியாக மறந்து போய் இருக்கும்.  காரணம், புகழ் என்பது மிகப் பெரிய போதை.  அதை அடித்துக் கொள்ள வேறு எந்த போதையும் இல்லை.  சுஜாதா மறந்து போன, அவரது ரசிகர்களுக்குத் தெரியவே தெரியாத விஷயம் என்னவென்றால், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் … Read more

135. அந்தணர் என்போர்…

இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது.  அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது.  மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார்.  நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார்.  இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது.  அதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை.  … Read more

பூச்சி 134: வணிக எழுத்தும் இலக்கியமும் (தொடர்கிறது)

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,  வணக்கம், நலம் விழைகிறேன்.  என்னுடைய 17 வயதில் முதன்முதலாக உங்களை வாசித்தேன். இப்போது 25 வயதில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகால வாசிப்பில் விடுபட்டவற்றையும், ஏற்கெனவே வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்வதற்கும் உங்கள் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏற்கெனவே இருந்த உங்கள் புத்தகங்கள் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுக்க, அவை அப்படியே கைமாறிச் சென்றுவிட்டன. நான் புத்தகங்களைக் கடனளிக்கிறவன் அல்லன் என்றபோதிலும், புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைத் தொகுப்புகளைத் தருவது வழக்கம். … Read more