157. க.நா.சு.வின் 55 ரஜாய் பெட்டிகள்

நேற்று எழுதிய இனிய அனுபவத்துக்கு ராம்ஜி ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார்.  அது: செருப்பை வெளியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளாமல் நான் இன்று வாழ்வதே உங்கள் எழுத்தை படித்த பின் தான் என்று எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளம் மாணவன் சொன்ன தருணம். 80 வயது கடந்த மூதாட்டி புத்தக அரங்கிற்குள் வந்து பழுப்பு நிறப்பக்கங்களில் நீங்கள் தீ ஜாவை பற்றி எழுதியதைப் பேசி நெகிழ்ந்த தருணம். … Read more

156. இனிய அனுபவம்

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.   பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக … Read more

155. நேசமித்ரன், ஒக்தாவியோ பாஸ், ரொனால்ட் சுகேனிக் மற்றும் சிலர்…

சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதி தான் ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.  ஐயோ, அசோகாவை முடிக்கும் வரை (மார்ச்) என்னால் எந்தப் பக்கமும் திரும்பக் கூட முடியாதே என்றேன்.  நான் தான் அவரது ஆதர்சம் என்று அதற்கு முன்பே கூட சில கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் விடவில்லை.  நாவல் 150 பக்கம், வெறும் ஐந்து பக்கத்தைப் படித்தால் கூடப் போதும் என்றார்.  … Read more

154. இருவர்

கடந்த பத்தாண்டுகளில் நான் கண்டெடுத்த இரண்டு புதையல்கள் அராத்துவும் சாதனாவும்.  அராத்துவை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எந்த எழுத்தாளரும் எழுத்தாளராக ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  சீ அசிங்கம் என்றுதான் ஒதுக்குவார்கள்.  எனக்கு 66 வயது ஆகியும் இன்னும் இந்த சீ அசிங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அதைப் பற்றி நான் கவலையும் படுவதில்லை.  அராத்துவோ ஒரு படி மேல்.  போங்கடா dickheads என்று திட்டிவிட்டுப் போய் விடுவார்.  (ஆனால் அராத்துவை இலக்கிய ஏரியாவுக்கு வெளியே உள்ள இளைஞர்கள் … Read more

என்ன பெயர் வைக்கலாம்?

வணக்கம் சாரு. நான் வசிக்கும் பகுதிக்கு எழுத்தாளர்களின் பெயர்களை சூட்ட விருப்பம். தங்களின் ஆலோசனைகளையும் மற்றும் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் தயவுகூர்ந்து பகிரவும். நன்றி. பிரமிள்  ஞானக்கூத்தன்  ஔவை  சூடாமணி  பாரதி  நகுலன்  மௌனி  அசோகமித்திரன்  ஜெயகாந்தன்  கல்கி  சாண்டில்யன்  சார்வாகன்  ஆதவன்  சுஜாதா  வள்ளுவன்  கம்பன் அம்பை தி.ஜானகிராமன் மா. அரங்கநாதன் வல்லிக்கண்ணன்  தொ.மு.சி.ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணன் நம்பி ஜி.நாகராஜன் கந்தர்வன் கு.அழகிரிசாமி பிரபஞ்சன் புதுமைப்பித்தன் ஆதவன் நீல பத்மநாபன் அகிலன் காசியபன் சிட்டி … Read more

153. ஒரு ஜாலியான மேட்டர்…

படித்து செம ஜாலியாக ஆகி விட்டதால் இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறேன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள டி. தர்மராஜ் என் மதிப்புக்கு உரியவர்.  தமிழ்நாட்டில் நான் மதிக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளில் அவர் ஒருவர்.  அவரது சமீபத்திய மரண ஆசை என்ற கதை மாதிரியான கட்டுரை பிரமாதமாக இருந்தது.  அவர் இப்போது என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த போது யாரோ எழுதிய ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  அது அவரது மரண ஆசை கதை … Read more