உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 10

டியர் சாரு, நலமா? என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் கபீர். ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவும் இயக்கி வருகிறேன். இது வரை மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளேன். அதில் கடைசியாக எடுத்த திரைப்படம் 90,000 வியூஸ் வரை சென்றுள்ளது. இப்போது சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளேன். எனக்கு உங்களை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை. நான் கடந்த நான்கு வருடங்களாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அவர் ஒரு நாள் என்னை அழைத்து நீ நல்ல … Read more

சிறந்த மாணவர்

நான் எதையாவது படிக்கச் சொன்னால் இருபத்து நான்கு மணி நேரத்தில் படித்து முடித்து விடும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஸ்ரீ, அப்துல் (பாண்டி), மஹாதேவன். இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் சரவணன் சிவன்ராஜா. இவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நால்வருமே முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். நால்வரில் மூன்று பேர் திருமணம் ஆகாதவர்கள். அப்படிப் பார்த்தால் திருமணம்தான் வாசிப்புக்குத் தடையாக இருக்கிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீ அதையும் சமாளித்து விட்டாள். பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து… … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (9) – கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி

ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன? இதுவரை 75 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 50 பேர் பணமும் செலுத்து விட்டார்கள். (மற்ற நண்பர்கள் கவனிக்கவும்.) இன்னும் ஒரு 75 பேர் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன். மொத்தம் 150. இதற்கிடையில் சீனி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அரங்கத்தின் கொள்ளளவு எத்தனை? எத்தனை பேர் வரலாம்? … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 8

ஜூன் 30 அன்று காலை பத்து மணிக்கு பயிலரங்கம் ஆரம்பித்து விடும். நான் ஜூன் 29ஆம் தேதி மாலை திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு பண்ணை இல்லத்தில் தங்குவேன். அன்று இரவு யாரையும் சந்திக்க மாட்டேன். மறுநாள் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் பேச வேண்டும். நான் நேரம் தவறாமையை மிகப் பிடிவாதத்துடன் கடைப்பிடிப்பவன். இந்திய நேரம் என்பதெல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது. பத்து என்றால் பத்து மணிக்கே தொடங்கி விடுவேன். மிஷல் … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – ஒரு முக்கிய அறிவிப்பு

ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடக்க இருக்கும் பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 2000 ரூ. குறைந்த பட்ச நன்கொடை. கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூ. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கல்லூரி மாணவர்களை அழைக்கிறேன். இந்தக் கட்டணமும் செலுத்த முடியாதவர்கள் எனக்கு … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (7)

ஜுன் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நான் ஒரு பயிலரங்கம் நடத்த இருப்பது பற்றி நீங்கள் அறிவீர்கள். இடைப்பட்ட எட்டு மணி நேரத்தில் தேநீர் இடைவேளை கால் மணி நேரம், மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் போக ஆறரை மணி நேரம் பயிலரங்கம் நடக்கும். ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, தென்னமெரிக்க … Read more