எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்?

இது ஒரு நீண்ட கதை.  கதை என்ன கதை?  என் வாழ்க்கையில் நடப்பதுதான் கதை.  பொறுமையாகப் படியுங்கள்.  இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.  ஆனாலும் இங்கே அது எல்லாமே ஒரு தொகுப்பாகக் கோர்க்கப்பட்டிருக்கும்.  இதில் இப்போது சொல்லப் போகும் சம்பவங்கள் இனி வரப் போகும் கதையிலோ நாவலிலோ வந்தால், இது சாரு ஏற்கனவே அவர் ப்ளாகில் எழுதியதுதானே என்று சொல்லாதீர்கள்.  ப்ளாகில் நான்தானே எழுதுகிறேன், என் ஆவியா எழுதுகிறது? அதனால் ப்ளாகில் எழுதியதுதான் புத்தகமாகவும் … Read more

என்னையும் என் எழுத்தையும் புரிந்து கொள்ள ஒரு எளிய வழி…

சமீபத்தில் என் நண்பர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். Loving and Hating Charles Bhukowski: A Memoir. எழுதியவர் ப்யூகோவ்ஸ்கியின் காதலி லிண்டா கிங். இந்தப் புத்தகத்தை நான் படிப்பதை விட என் வாசகர்களும் என் புதிய வாசகர்களும் படிப்பதுதான் சிறந்தது. ஏனென்றால், இந்தப் புத்தகம் மாதிரிதானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் இதைப் படிக்க வேண்டும்? இந்தப் புத்தகத்தில் ப்யூக் லிண்டாவுக்கு எழுதிய ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையை உங்களுக்குத் தருகிறேன். … Read more

கூல் சுரேஷும் மைக்கேல் ஜாக்ஸனும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர்.  அல்மோஸ்ட் ஐலண்ட் இலக்கிய நிறுவனம் நடத்தும் கருத்தரங்கு.  வங்கக் கவிஞர் ஜாய் கோஸ்வாமி வங்காள மொழியில் பேசுகிறார்.  அவர் பேசப் பேச அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.  மொழிபெயர்த்தவர் மேற்கு வங்கத்தில் கலெக்டராகப் பணி புரிகிறார் என்று பிறகு தெரிந்தது.  அந்த மொழிபெயர்ப்பாளர் எதையேனும் விட்டுவிட்டால் அதை எடுத்துக் கொடுக்க ஜாய் கோஸ்வாமி அருகிலேயே இன்னொருவர் அமர்ந்திருக்கிறார்.  ஜாயுடன் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள்.  … Read more

அற்புதம்

அஷோக் கோபால் தெ ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதியிருந்ததுதான் இதுவரை என்னைப் பற்றி வந்த கட்டுரைகளில் ஆகச் சிறந்தது என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  என் கருத்தும் அதுவே.  ஆனால் என்னை கடந்த ஒரு மாதமாக மட்டுமே அறிந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னைப் பற்றி இத்தனை விரிவாக எழுதியிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.  நம்பவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்த … Read more

நாளை மதியம் ஒரு நேர்காணல்

நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே: https://www.swellcast.com/charu_nivedita