Charu Nivedita
ஹிந்து இலக்கிய விழா
26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் மாலை ஐந்து மணிக்கு நந்தினி கிருஷ்ணனுடன் உரையாடுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் இரண்டு நிகழ்வுகள் இருக்கும். என் உரையாடல் ஹிந்து பெவிலியனில் நடக்கும். குழம்பி விட வேண்டாம். வருவதாக இருந்தால் பதிவு செய்யுங்கள். அரங்கம் ஐநூறு பேருக்கானது என்று கேள்விப்பட்டேன். வாருங்கள். பதிவு செய்வதற்கான படிவம் கீழே: https://www.thehindu.com/litfest/lfl-registration/
அந்நியனுடன் ஓர் உரையாடல்
அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். http://tinyurl.com/Anniyunadun-Oru-Uraiyaadal
குற்றமும் தண்டனையும் (ஒரு நீதிக்கதை)
தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது. அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம். அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார். ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை … Read more
புத்தக விழா கடைசி நாள்
இன்றும் நேற்று போலவே மாலை நான்கு மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். நான்கு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (598 C) இருப்பேன்.
ஹிந்துவில் நேர்காணல்
தெ ஹிந்து தினசரியில் என்னையும் நந்தினியையும் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். வரும் 26, 27 தேதிகளில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்தப் பேட்டி வெளிவந்தது. https://www.thehindu.com/litfest/the-hindu-lit-fest-interview-author-charu-nivedita-translator-nandini-krishnan-new-book-conversations-with-aurangzeb/article67744070.ece