பூச்சி 74

அன்புள்ள சாரு அவர்களுக்கு, உங்கள் எழுத்தின் ரசிகன் நான். சுவைத்து சுவைத்துப் படிப்பேன். உங்கள் எழுத்தைப் படிக்கையில் தேனருவியில் நீந்துவது போல் இருக்கும். பித்த நிலை‌யி‌ல் இரு‌ந்து பேரின்ப நிலைக்குத் தாவும் தன்மை உடையது உங்கள் எழுத்து. நான், உங்கள் எழுத்து மூலமாக பேரின்பத்தில் தாவிக் களியுற்று இருக்கிறேன். அவ்வப்போது நாக்கு சுவையற்று இருக்கும்போது இனிப்பை உண்பது போல உங்கள் ஸீரோ டிகிரியை நான் அடிக்கடி படிப்பேன். அற்புதம்!  பூச்சி தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூச்சி … Read more

பூச்சி 73

நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.  Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது.  முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று … Read more

பூச்சி 72

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியை நேற்று அனுப்பியிருந்தார்.  ”நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.” ஹலோ சொல்ல ஒரு மனிதனுக்கு என்ன தகுதி வேண்டும் Mr. Charu? பாரதி மகாத்மாவை சந்தித்த அத்தியாயத்தைப் படித்தாலே இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கேள்வியில் இருந்த மிஸ்டர் என்ற வார்த்தை எனக்கு அவமரியாதை போல் பட்டதால் எதுவும் பதில் எழுதவில்லை.   வெறுமனே சாரு என்று எழுதினால் எனக்கு அப்படித் தோன்றியிருக்காது.  தொண்ணூறு … Read more

பூச்சி – 71

71 சமீபத்தில் எழுதியிருந்தேன் அல்லவா, சினிமா உலகில் போய் என்னால் குப்பை கொட்ட முடியாது என்று?  அங்கே போனால் கொஞ்சமாவது ஜால்ரா அடிக்க வேண்டும்.  நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.  அது நம்மால் முடியாது என்று எழுதியிருந்தேன்.  அதை எழுதிவிட்டுப் படுத்த போது என் கனவில் பாரதி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சி வந்தது.  இங்கே சென்னையில் கதீட்ரல் சாலையில் ராஜாஜியின் பங்களாவில் காந்தி தங்கியிருந்தபோது.  அந்தச் சந்திப்பு பற்றி வ.ரா. … Read more

பூச்சி 70

நேற்றைய அத்தியாயத்திலேயே வந்திருக்க வேண்டியது.  விடுபட்டு விட்டது.  மக்களுக்கு – அதாவது பொதுஜனத்துக்கு எப்போதுமே வழிபாட்டுக்குரிய ஒரு பிம்பம் – icon – தேவைப்படுகிறது.  அந்தந்த காலகட்டத்துக்கேற்ப அந்த பிம்பம் வழிபாட்டுக்குத் தகுதி உடையதாகவோ அல்லது வெறும் அட்டைக் கத்தியாகவோ இருக்கிறது.  முன்னதுக்கு காந்தியையும் பின்னதுக்கு அப்துல் கலாமையும் நீங்கள் உதாரணமாகக் கொள்ளலாம்.  கலாம் சமீபத்திய உதாரணம்.  இந்தியாவில் உள்ள மாணவர்கள் கலாமைத் தங்கள் வழிபாட்டு பிம்பமாகக் கொண்டாடினார்கள்.  புரிகிறது.  ஆனால் லட்சோபலட்சம் ஆட்டோக்காரர்கள் ஏன் இயேசு … Read more

பூச்சி 69

அன்புள்ள சாரு அப்பாவிற்கு,  என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை என் இலக்கியத் தந்தையாகக் கருதுகிறேன். இன்று என் கண்களில் வழிந்தோடும் வலிமிகுந்த கண்ணீர் உங்களுக்காக. அழைத்துப் பேசி விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்த மனம் வரவில்லை. விஷயத்திற்கு வருகிறேன். முரகாமியின் தீவிர வாசகன் நான். நீங்கள் தேடிப் பார்த்தாலும் அவருடைய ஒரே ஒரு நேர்காணல்தான் youtubeஇல் கிடைக்கும். தேடினாலும் அதிகம் தகவல் கிடைக்காத … Read more