சந்திப்பு

என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஏற்கனவே சொன்ன உதாரணம் இது. மைலாப்பூர் டெலபோன் டைரக்டரி போடுகிறார்கள் அல்லது ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் கார்டு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மைலாப்பூரில் வசிக்கும் என் பெயர் மட்டும் டைரக்டரியில் இருக்காது. அல்லது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆதார் கார்டு கொடுக்கப்படும். எதிர்வீட்டுக்காரனுக்குக் கொடுக்கப்படும். பின்வீட்டுக்காரனுக்கு கொடுக்கப்படும். என்னை விட்டு விடுவார்கள். டேய் தம்பி, நான் என்ன தீண்டத்தகாதவனாடா? இதே காரியத்தை நீயும் உன் சகாக்களும் சுமார் … Read more

பிக் பாஸ் – 3

இங்கே இருந்த பதினாறு பேரையும் பதினாறு லைப்ரரியாகப் பார்த்தேன். (ஆனா என்னை மட்டும் அப்டிப் பார்க்கலே!) வந்த போது இருந்த முகன் வேற. இப்போ இருக்கிற முகன் வேற. இந்த மாற்றத்துக்கு பிக் பாஸ்தான் காரணம். (ஆனா நான் மட்டும் மாறவே இல்ல பிக் பாஸ். நீங்க என் கிட்ட தோத்துட்டிங்க.) இந்தப் பதினாறு பேருக்கும் என்னென்ன (அட்வைஸ்) தேவையோ அது எல்லாத்தையும் குடுத்தேன். அதுனாலதான் எல்லாரோடையும் சேர்ந்து நானும் சண்டை போடல. – பகவான் கிருஷ்ணன் … Read more

பிக் பாஸ் – 3

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சாதியையும் நான் ஒரு இனக்குழுவாகவே பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதிக்குமான கலாச்சாரம் இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் கூட சாதி ஒழிந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சில முற்போக்குவாதிகள் மற்றும் பிராமண எதிர்ப்பாளர்கள் சொல்வது போல், இந்து மதத்தில் மட்டுமே சாதி இருக்கிறது என்று சொல்வது அறியாமை. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு இனத்திலும் சாதி உண்டு. ஆஃப்ரிக்காவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதியும் ஒரு மொழியும் இருக்கிறது. … Read more

R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா

நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி.  அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள்.  தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார்.  ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல … Read more

பிக்பாஸ் – 3 சில விளக்கங்கள்

நேற்று பிக்பாஸ்-3க்கு வெளியே உள்ள, ஆனால் பிக்பாஸ் குழுவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். நண்பர் எனக்கு மிகவும் வேண்டியவர். தெரிந்ததை மட்டுமே பேசுவார். தெரியாத விஷயத்தைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பிக்பாஸ்-3இல் தர்ஷன் வெளியேறியது பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகளும் தவறு என்றார் நண்பர். ஏனென்றால், ஒரு போட்டியாளர் வெளியேறுவது என்பது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளைப் பொறுத்தே இருக்கிறது. இந்த ஓட்டுகள், இவற்றின் எண்ணிக்கை எல்லாமே மிகவும் வெளிப்படையாக நடக்கின்றன. … Read more

மௌனமும் பேச்சும்…

நேற்று இரவு ஒன்பதரைக்கே உறங்கச் சென்று விட்டேன்.  அத்தனை அசதி.  நாள் பூராவும் செய்த ஒரே வேலை, படிப்பு.  ஒரு இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் – பத்து மணி நேரம் – உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் வலிக்கிறது.  உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை இருந்த இடத்திலேயே இருந்து, அங்கே இங்கே நகராமல், அசையாமல் படித்துக் கொண்டே இருந்து பாருங்கள்.  இடையில் போன் எதுவும் … Read more