சசிகலா x பன்னீர் செல்வம்

சசிகலா முதல்வராவதில் என்ன தப்பு? ஜெ. ஊழல் செய்யாதவரா? கருணாநிதி ஊழல் செய்யவில்லையா? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம், ஆச்சா போச்சா மூச்சா என்று கத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு என் பதில்: வெளிப்படையாகக் குற்றச் செயல்களில் ஈடுபடலாம்; யார் சொத்தை வேண்டுமானாலும் அதிகாரத்தை வைத்து மிரட்டி அபகரித்துக் கொள்ளலாம்; ஒரு முதலமைச்சரையே மருத்துவமனையில் 75 நாட்கள் சிறை வைத்து அவருடைய புகைப்படமோ விடியோவோ வெளியிலேயே வராமல் இருட்டடிப்பு செய்யலாம்; கடைசியில் அந்த முதலமைச்சரின் பிணத்தின் முகத்தை மட்டும் … Read more

கேரள இலக்கிய விழா

கோழிக்கோட்டில் நடக்கும் கேரள இலக்கிய விழாவின் இறுதி நாள் அன்று கலந்து கொள்கிறேன்.  இந்து மேனனோடு ஒரு இலக்கிய உரையாடல்.   என்னுடைய நிகழ்ச்சி பற்றி பின்வரும் இணைப்பில் கண்டு கொள்ளலாம். http://www.keralaliteraturefestival.com/programs/ http://www.keralaliteraturefestival.com/programs-2017/

கல்ச்சர் வல்ச்சர் – 1

நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற தலைப்பில் மின்னம்பலம் இணைய இதழில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதி வருகிறேன்.  இன்றைய தினம் கல்ச்சர் வல்ச்சர் என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை.  இதன் அடுத்த பகுதி நாளை வெளிவரும்.  கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் நன்றி.  இந்தக் கட்டுரைக்காக பிரத்தியேகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த என் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய பிரபு காளிதாஸுக்கும் விசேஷ … Read more

ஊடகக் கறையான்கள்

மேற்கண்ட தலைப்பில் ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதிய நீண்ட கட்டுரையை டாக்டர் ஸ்ரீராம் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.  முழுதும் படித்தேன்.  இது குறித்து ஏற்கனவே நான் இந்தத் தளத்தில் ஒருமுறை அல்ல; பலமுறை எழுதியிருக்கிறேன்.  அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன்.  அது பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை.  சரி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று விட்டு விட்டேன்.  இப்போது ஜெயமோகன் எழுதியதும் அதற்கு அரவிந்தன் விளக்கம் எழுதியிருக்கிறார்.  இரண்டையும் படியுங்கள். http://www.jeyamohan.in/94596#.WIStVc9EnIU இது அரவிந்தன் பதில்: http://www.jeyamohan.in/94776#.WISuU89EnIU இது … Read more

ஜல்லிக்கட்டு

டியர் சாரு, இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்வது என்பது தொடர்ந்து அச்சம் தரக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு தனி மனிதனின்  கருத்தைப் பதிவு செய்ய உரிமை இல்லை. இப்படிப்பட்ட  மனப்பிறழ்வு கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்ந்து  தனி ஆளாக போராடி வருகிறீர்கள். எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களது கருத்தை முன்வைத்து  வருகிறீர்கள். ஜல்லிக்கட்டை பற்றித்தான் சொல்கிறேன். தன் தாய் மொழியே சரியாகத் தெரியாத ஒரு சமூகம், தாய் மொழியில் பேசுவது கேவலம் என்று நினைக்கும் … Read more