புத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்

இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி.  இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார்.  (அவருக்கு போதையே ஏறாதே?  என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.)  இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை.  இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது.  ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more

அந்திமழை

இம்மாத அந்திமழை அச்சு இதழில் தன்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்கள் பற்றி சாருவின் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 3)

சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே? அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன். http://bit.ly/1VFWyIP