புத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்

இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி.  இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார்.  (அவருக்கு போதையே ஏறாதே?  என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.)  இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை.  இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது.  ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் ஆட்டத்தைப் பார்த்து ”என் லைஃப்லயே இப்டி ஒரு ஷாட்டைப் பார்த்ததில்லை” என்று சொன்ன கதையாக கதைக்கிறார்கள்.  வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் என் நண்பர் பிரபு காளிதாஸ் என் பெயரைக் குறிப்பிட்டிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி.  ஒருவகையில் இது சாதாரணமானது அல்ல.  என்னோடு உங்கள் பெயர் இணைந்தாலே பலரிடமிருந்தும் ஏச்சும் பேச்சும் வரும்.  அதையெல்லாம் தாங்கிக் கொள்ள இரும்பு மனம் வேண்டும்.  பிரபு அதற்கெல்லாம் சளைக்காதவர்.  நல்ல காலம், பிரபுவின் மனைவியும் என் வாசகி.  அப்படி இல்லாத வீடுகளில் விவாகரத்து வரையெல்லாம் கூடப் போயிருக்கிறது.  உங்களுடைய வெளிப்படையான வார்த்தைகளுக்கு நன்றி பிரபு.

 

VO2A7740

 

VO2A7744

 

VO2A7745