இறைவி : கருந்தேள் ராஜேஷ்

இறைவி படம் பற்றி ஒரு ஆஸ்திரேலியா தமிழ் வானொலியில் என்னைப் பேட்டி எடுத்தார்கள். கேள்விகள் அந்தப் படத்துக்கு சார்பாக இருந்தாலும் என்னை மேலும் பேச வைப்பதாக இருந்தது. ஏன் அந்தப் படத்தைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருந்தது என்று அதில் விரிவாகப் பேசியிருக்கிறேன். செல்வி என்ற பெண் பேட்டி எடுத்தார். பேட்டியை மிகவும் அறிவார்த்தமாகக் கொண்டு சென்றார். நாளை ஒலிபரப்பாகும் என்று சொன்னார். எப்படியும் இறைவி இயக்குனர் வெற்றி அடைந்து விட்டார். ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. என்னையும் சகட்டுமேனிக்கு ஆயிரக் கணக்கில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். I just dont care. காரணம், சினிமா இங்கே மதம்.

மேற்கண்ட குறிப்பை சற்று நேரத்துக்கு முன்பு முகநூலில் வெளியிட்டிருந்தேன்.  அந்தப் பேட்டி ஏன் முக்கியம் என்றால், பேட்டி எடுத்தவர் அந்தப் படத்தைப் பற்றி இன்னும் தெளிவாக என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்றார்.  அந்தக் கருத்துக்களை அப்படியே ஒத்திருந்தது ராஜேஷின் விமர்சனம்.  நான் கோபத்துடன் எழுதியிருந்தேன்.  ராஜேஷ் சிறிதும் கோபம் இல்லாமல் அமைதியாக எழுதியிருக்கிறார்.  நானும் இப்படி சாந்த சொரூபமாக காரண காரியங்களை அடுக்கி எழுத வேண்டுமானால் கதை எழுதும் மனோபாவம் என்னை விட்டுப் போய் விடும்.

ராஜேஷின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன்.  இறைவியை சிலாகிப்பவர்களுக்கு இன்றைய வாழ்க்கை பற்றித் தெரியவில்லை; மற்றும் சினிமா தெரியவில்லை.  அவ்வளவுதான்.

ஆனால் ஒன்று, கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படமும் இப்படித்தான் மொக்கையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.  ஜிகிர்தண்டாவை விட நல்ல படமாகவும் இருக்கலாம்.  அப்போது நான் அந்தப் படத்தைப் பாராட்டும் போது இப்போது என்னைத் திட்டும் ரசிகக் குஞ்சுகள் மூஞ்சியை எங்கே வைத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

இதோ ராஜேஷின் விமர்சனம்:

http://karundhel.com/2016/06/iraivi-2016-tamil.html