பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 9

செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். மேலும் படிக்க: http://bit.ly/1rNgcH8

நிலவு தேயாத தேசம் – 28

துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 8

விமரிசனம் தவிர்த்து செல்லப்பா செய்த மற்ற இரண்டு காரியங்கள் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கக் கூடியவை. புனைகதையில் அவர் செய்த சாதனைகளைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். பண்டிதர்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராக ஒற்றை மனிதராக, கிட்டத்தட்ட ஒரு கெரில்லா போராளியைப் போல் போராடியிருக்கிறார் செல்லப்பா. அந்த வகையில் இன்றைய தினம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்த மகத்தான மனிதருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள். ‘எழுத்து’ என்ற பத்திரிகை மூலம் அவர்தான் சமகால இலக்கியத்துக்கான … Read more

சீரழிவுக் கலாச்சாரம் – ஜி.கார்ல் மார்க்ஸ்

முகநூலில் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது: எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் … Read more