நிலவு தேயாத தேசம் – 27

Mavi Gözlü Dev என்பது படத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் The Blue Eyed Giant.  திரும்பத் திரும்ப எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் அந்தப் படம் வெறும் சினிமா அல்ல; நாஸிம் ஹிக்மத் என்ற மகா கவிஞனின் வாழ்க்கை.  என்னுடைய சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு அற்புதமான படைப்பைப் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.  துருக்கி பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய ஒரு படம் இது.  மட்டுமல்லாமல் எழுத்து … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 7

பெண்களின் வாழ்வை இலக்கியமாக்கியதில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரைப் போலவே சிகர சாதனை செய்திருக்கிறார் சி.சு.செல்லப்பா. தமிழ் தெரிந்த அத்தனை பெண்களும் படித்தே ஆக வேண்டிய ஒரு நவீன காவியம் ‘ஜீவனாம்சம்.’ மேலும் படிக்க: bit.ly/1TdwWx7

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 6

‘நான் அப்போது சி.சு. செல்லப்பா அல்ல. 1939-ல் வ.ரா. ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்த வாரப் பத்திரிகையான ‘பாரத தேவி’யில்தான் நான் சி.சு. செல்லப்பா ஆனேன். என் முதல் கதை புரூப் ஸ்டாண்டிங் காலியை எடுத்துக்கொண்டு என் மேஜை முன் வந்து நின்ற வ.ரா. திடுதிப்பென என் ஊரையும் அப்பாவின் பெயரையும் கேட்டார். சொல்லவும், ‘ஏன் ஸார், சி.சு. செல்லப்பா என்று வைத்துக் கொள்ளக் கூடாது? அரைத் தமிழனாக இருக்கிறீர்’ என்று கேட்டு விட்டு சடக்கெனத் திரும்பி தன் … Read more

நிலவு தேயாத தேசம் – 26

அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையின் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தைத் துருக்கிப் பாராளுமன்றம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து  நிஸாம் ஹிக்மத் தனது சிறைவாசத்தின் பனிரண்டாவது ஆண்டில் 1950, ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக புர்ஸா சிறையிலிருந்து இஸ்தாம்பூல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உடல்நிலை மோசமானது.  அதனால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  மருத்துவமனைக்குக் … Read more