அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையின் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தைத் துருக்கிப் பாராளுமன்றம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிஸாம் ஹிக்மத் தனது சிறைவாசத்தின் பனிரண்டாவது ஆண்டில் 1950, ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக புர்ஸா சிறையிலிருந்து இஸ்தாம்பூல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உடல்நிலை மோசமானது. அதனால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையைக் கூட அரசு நிராகரித்து விட்டது. அதனால் மே 2-ஆம் தேதி திரும்பவும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் நஸீம்.
மேலும் படிக்க: andhimazhai.com/news/view/nilavu-26