அவதூறுக்கு எதிர்வினை (5): அராத்து

அனானிமஸ் (2): நான் சின்ன வயதாக இருந்த போது ஒரு அண்ணன் இரவில் தெருக்கடை போடுவார். அப்போது சாலையிலேயே நாற்காலி , மேஜை போடும் பழக்கம் இருந்தது. அவர் மிஸ்டர் மெட்றாஸ் போட்டிகளில் கலந்து கொண்டவர். வென்றாரா என்பது நினைவில்லை. அப்போது அவர் கமல் ரசிகர். அப்போது கமல் ரசிகர்களில் பலர் ஜிம் பாடி மெயிண்டெயின் செய்வார்கள். ரஜினி ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் அவ்வபோது முட்டிக்கொள்ளும். ரஜினி ரசிகர்கள் எந்த ஆயுதத்தை கமலுக்கு எதிராக இறக்குவது எனத் தெரியாமல் … Read more

தொலைந்து போன புத்தகம்…

அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண்.  அப்படி ஒரு குடி.  ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை.  அதுவும் ஒரு தோது.  தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம்.  ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம்.  அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை.  இப்போது குடி.  பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான்.  நெருங்கிய நண்பன்.  சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான்.  இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பெயருக்கேற்ற புத்திசாலி.  … Read more

மாயமான் வேட்டை (ஒரு நீண்ட சிறுகதை)

கடும் மன உளைச்சலில்தான் சாந்த்தியாகோ நகரத்துக்கு வந்து சேர்ந்தேன்.  மாச்சு பிச்சுவில் பிரச்சினையே இல்லை.  ஆனால் குஸ்கோவில் மூச்சு விட முடியவில்லை.  இரண்டு காரணங்கள்.  மாச்சு பிச்சுவின் உயரம் 8000 அடிதான்.  குஸ்கோ 12000 அடி.  மாச்சு பிச்சுவில் சுற்றியது பகல்.  குஸ்கோவில் இரவு.  குஸ்கோவில் இரவு தூங்கி விட்டு பகலில் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த நாள் உயூனி போகலாம் என்பது திட்டம்.  உயூனி ஒரு உலக அதிசயம்.  11,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் … Read more