அனானிமஸ் (2):
நான் சின்ன வயதாக இருந்த போது ஒரு அண்ணன் இரவில் தெருக்கடை போடுவார். அப்போது சாலையிலேயே நாற்காலி , மேஜை போடும் பழக்கம் இருந்தது. அவர் மிஸ்டர் மெட்றாஸ் போட்டிகளில் கலந்து கொண்டவர். வென்றாரா என்பது நினைவில்லை. அப்போது அவர் கமல் ரசிகர். அப்போது கமல் ரசிகர்களில் பலர் ஜிம் பாடி மெயிண்டெயின் செய்வார்கள். ரஜினி ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் அவ்வபோது முட்டிக்கொள்ளும்.
ரஜினி ரசிகர்கள் எந்த ஆயுதத்தை கமலுக்கு எதிராக இறக்குவது எனத் தெரியாமல் கமலை “பொட்டை “ என சொல்வார்கள்.
அது போல இவரிடமும் ஒரு ரஜினி ரசிகர் இட்லி ஆம்லெட் சாப்பிட்டுக்கொண்டே சிரித்துக்கொண்டே சொன்னார். “ உன் தலைவன் பொட்டை , நீயும் அப்டி ஆயிடாதே “
அப்போது இவர் கமல் ரசிகர் மன்ற பொறுப்பிலும் இருந்தார்.
“ஒம் பொண்டாட்டியை என் கூட அனுப்பு. நான் தலைவர்ட்ட அப்பாயின்மெண்ட் வாங்கறேன். ஒம் பொண்டாட்டி சொல்லட்டும் – நான் தலைவர் பொட்டைன்னு ஒத்துக்கறேன் “ என்றார்.
அதன்பிறகு இட்லித் தட்டு பறந்தது. கைகலப்பாகி ரஜினி ரசிகர் மண்டை உடைந்து போலீஸ் கேஸ் ஆனது .
அந்தக் காலத்தில் இவ்வகை சண்டைகள் சகஜமானவை. அரசியல் சரி இல்லாமல் , லாஜிக்கே இல்லாமல் பொட்டை என்று திட்டுவதும் அதற்கு சண்டையிட்டுக்கொள்வதும் சகஜம்.
இத்தனை வருடங்கள் உருண்டோடியும் நிலைமை இன்னும் மாறவில்லை. மட முண்ட சினிமா ரசிகர்கள்தான் இப்படி அடித்துக்கொண்டார்கள் என்றால் , இப்போது இலக்கியத்திலும் அப்படியே சில குண்டாந்தடிகள் தொடர்கிறது.
“சாரு நிவேதிதா ஒரு எழுத்தாளரே அல்ல “ என்று பல காலமாக பல ஆட்டுக்கொட்டை மூளைகள் கத்திக்கொண்டேயிருக்கின்றன.
அடுத்து ,
“சாரு எழுதுவது இலக்கியமே அல்ல “ இந்த இரண்டு வாக்கியங்களை தொடர்ந்து தமிழ் இணையத்தில் யாரேனும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். (அனானிம்ஸ் – 1 – சிறுகதை படிக்கவும். நுட்பமான சிறுகதை 🙂 )
இந்த பீயுருட்டி வண்டு கோஷ்டியில் கடைசியாக இணைந்திருக்கும் வண்டுதான் கோகுல் பிரசாத் என்று தெரிய வருகிறது.
சரி யார்ரா இந்த கோகுல் பிரசாத் என்று நண்பர்களிடம் கேட்டேன். (என்னால் பார்க்க முடியவில்லை , அல்ரெடி பிளாக் போல) சினிமா பாப்பாரு பாஸ் என்றார்கள். அந்த எழவைத்தான் வயித்துல இருக்குற தமிழ் குழந்தை எல்லாம் பாக்குதே , அப்பால …என்றால் , இணைய இதழுக்கு எடிட்டர் என்றார்கள். அது என்னா வேலை என யாரேனும் விளக்குங்கள். சாரு நிவேதிதா – இந்த பதவியால்தான் கடுமையாக காயப்பட்டார் என அனுமானிக்கிறேன். தமிழினி என்ற பெயர் மதிக்கத்தக்க பெயர். அதற்காக அதன் இணைய எடிட்டரையுமா மதிக்க வேண்டும் சாரு ?
இப்போ , ஜீரோ டிகிரி பப்ளிஷிங்க் இணைய இதழ் ஆரம்பிச்சா யார் சம்பளம் வாங்காம எடிட்டர் வேலைக்கு வருவா ? ராம்ஜி அவரது கார் டிரைவரைத்தான் எடிட்டர்னு பேர் போடுவார் என வச்சிக்குவோம். கார் டிரைவர் பத்து வுக்கும் ஈமெயில் ஐடி இருக்கு. வாட்ஸப் நம்பர் இருக்கு. பத்து ஏதாச்சும் உளரினால் ?. பத்துவுக்கு வண்ணதாசன் மூஞ்சி புடிக்காது. பத்து விவசாயியும் கூட .
“தானாய் முளைத்த விதை என்கிறார்கள்.
யாரோ வீசிய விதையிலிருந்துதானே…’
என்ற வண்ணதாசனின் வரிகளைப் படித்து விட்டு , பத்து எரிச்சலாகி – “ சுன்னி நான் கஷ்டப்பட்டு வெதை வெதைச்சாலே வெளச்சல் இல்லியாம் , எவனோ வெதைச்சானாம் இல்ல “ என்ற கடுப்புடன் வண்ணதாசன் மணிக்கட்டில் காறி உமிழ்கிறேன் என்று எழுதினாலோ அல்லது
“எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ என்பதைப் படித்து விட்டு “இப்ப என்னா அதுக்கு விவசாயிங்களை மூடிட்டு போராட்டம் பண்ணாம சும்மா இருன்னு சொல்றியா எனக்கேட்டு , பிரபஞ்சன் ஒரு போலி , அவரை நான் எட்டி உதைக்கிறேன் என்று பத்து எழுதினாலோ ,
வண்ணதாசனும் , பிரபஞ்சனும் கோபித்துக்கொள்ளவா போகிறார்கள். ராம்ஜி பத்துவை வேலையை விட்டுத் தூக்கி விடுவார். அவ்வளவுதான். அப்படித்தான் நீங்கள் கோகுலை எடுத்துக்கொள்ள வேண்டும் சாரு. பழைய நிறுவனங்களின் பெயர்கள் , அதற்கு இருக்கும் மதிப்பீடுகள் , மரியாதைகள் எதுவும் இல்லை இப்போது. ஈஸ்ட் இண்டியா கம்பனியையே எவனோ நம் இந்தியன் வாங்கி விட்டதாகப் படித்தேன். தமிழினி எல்லாம் எம்மாத்திரம் ? லீவ் இட் சாரு.
மற்ற பலரும் சாருவை கேவலமாகப் பேசியதை கண்டிப்பதைப் போல வருடிக் கொடுக்கும் அதே நேரத்தில் கோகுல் நேர்மையானவர் , மனதில் பட்டதை அப்படியே பேசுபவர் என்கிறார்கள். எனக்கு படு வேடிக்கையாக இருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே பேசுவதுதான் நேர்மையா ?
வாட்டாள் நாகராஜ் கூடத்தான் மனதில் பட்டதை தெனாவட்டாகப் பேசுகிறான். தாலிபான்கள் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறித்தான் செயலில் ஈடுபடுகிறார்கள். தங்கள் மனதில் பட்டதை செயல்படுத்தித்தான் மலாலாவை சுட்டார்கள்.
நிர்பயா வன்புணர்வு வழக்கில் குற்றவாளி சிறையில் தன் மனதில் பட்டதை நேர்மையாகச் சொன்னான் ஒரு டாக்குமெண்டரியில் . என்னய்யா லாஜிக் இது ? தன் மனதுக்குத் தோன்றுவதை தான்தோன்றித்தனமாகப் பேசுவதும் , தனக்குப் பிடித்ததைத் தவிர மற்றதெல்லாம் குப்பை என்பதும் , ஃபாஸிஸம் அல்லவா ?
அரைகுறை , விளங்காவெட்டி , மெண்டல் , சைக்கோ எல்லாம் தன் மனதில் தோன்றுவதையும் , தன் தகர புத்திக்கு எட்டியதை வைத்துக்கொண்டு ஏதோ உளரும். கேவலமாகப் பேசும். உடனே நேர்மயாகப் பேசி விட்டார் என்பீர்களா ?
நம் மனதில் ஆயிரம் கசடுகள் தோன்றும். அடுத்தவரை காரணமே இல்லாமல் வெறுப்போம். நமக்குக் காரணமே இல்லாமல் பிடித்ததைத் தவிர மற்றதெல்லாம் ஆய் என்று மனம் சொல்லும். இதையெல்லாம் நேர்மை என்ற பெயரிலும் வெளிப்படை என்ற ஹோதாவிலும் சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். கொஞ்சமேனும் அறிவிருப்பவன் மனதில் தோன்றுவதை எல்லாம் ப்ராஸஸ் செய்து பார்க்க வேண்டும். தர்க்க ரீதியில் ஒரு படைப்பை விமர்சனம் செய்வது வேறு , ஒரு ஆளுமையை சும்மானாக்க மூஞ்சில் துப்புவேன் என்பது வேறு. நேர்மை மயிராக ஏதேனும் ஒரு அரசியல் தலைவரை இப்படிச் சொல்லச் சொல்லுங்கள். எல்லா அரசியல் தலைவரையும் நமக்குப் பிடிக்குமா என்ன ? ஒரு சிலர் முகத்திலாவது காறித்துப்ப வேண்டும் என்று தோன்றும் தானே ? நேர்மையாகச் சொல்லச் சொல்லுங்கள். எழுத்தாளன் என்றால் என்ன அவ்வளவு இளக்காரம் ?
அந்தக் காலத்தில் கமலை பொட்டை ரஜினி ரசிகர் திட்டுவதற்கும் , சாரு எழுத்தாளரே இல்லை , காறி உமிழ்கிறேன் என்று திட்டுவதற்கும் என்ன வித்தியாசம். கடைசியில் இந்த அனானிமஸ் கமல் ரசிகராம். அதனால் கோபம் வந்து விட்டதாம். அபிலாஷ் கட்டுரை மூலம் அறிந்தேன். இந்த ரசிகக் குஞ்சுதான் இலக்கிய தர நிர்ணய சபை தாதாவாக செயல்படுகிறது போல. இந்த தமிழ் இலக்கிய உலகுக்கு நேர்ந்த கருமம்.
சாருவுக்கு ஒரு ராசி இருக்கிறது. சும்மா அவரைச் சீண்டினால் அவர் பெரிய ஆள் ஆக்கி விட்டு விடுவார். நான் அனானிமஸ் பற்றி எழுத வேண்டாம் என்று தான் முதலில் நினைத்தேன். பாருங்கள் , சாருவின் பிளாகைப் படித்து அவரின் வருத்தம் புரிந்து எழுதும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இந்த அனானிமஸ் பெயரை ஃபேஸ்புக்கில் காலையில் தேடும்போது பிராக்கெட்டில் “பாப்புலர் நௌ” என்று காட்டியது. அதாவது பலர் தேடியிருக்கிறார்கள். இதுதான் சாருவின் மகிமை.
நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். ஏதாவது ஒரு ஒழக்கு வரும், சாருவை திட்டும் பிரபலம் ஆகும். இன்னொரு அரைக்காப்பொடி வரும் , வசை பாடும் பிரபலம் ஆகும். இதுவும் ஒரு முனிவரின் வரம் போல. சாருவின் குதத்தை நக்குவோர் பிரபலமாகக் கடவது என்று அருளியிருப்பார் போல.
அதிலும் ஏன் குதம் என்கிறேன். விஷயம் இருக்கிறது.
சாரு 400 பக்க நாவல் எழுதியிருப்பார். அதில் ஒரு பக்கத்தில் காமம் சார்ந்த வார்த்தைகளோ அல்லது வக்கிரமான பாலியல் சித்தரிப்புகளோ இருக்கும். இந்த தலைப்பிரட்டைகள் இதை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டுத் திட்டிக்கொண்டு இருக்கும். ஒருவருடன் பழக வேண்டும் என்றால் முழுக்கப் பழகித்தான் கருத்து சொல்ல முடியும். அதே போலத்தான் நாவலும். முழுக்கப் படித்தால் அந்த இடம் ஏன் வருகிறது , என்று புரியும். ஒரு மனிதன் கக்கூஸில் இருக்கும் போது மட்டும் அவனுடன் பழகிப்பார்த்து கருத்து சொல்ல முடியுமா ?
நாவலில் ஸ்கீரின் ஷாட் மட்டும் எடுத்துப் போடுவது , சாரு கக்கூஸில் இருக்கும் போது அவரின் குதத்தை நக்கி விட்டு , சாரு நிவேதிதா நாறுகிறார் என்று சான்று தருவது போலத்தானே . அதனால் தான் இப்படி குத நக்கிகளாக வரம் வாங்கி வந்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதிலும் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருப்பவனைப் பார்த்து ஒற்றை வரியில் கேவலமாக அவதூறு ,வசை பாடுவதை வேறெப்படி சொல்வது ?
வழக்கமாக தினமும் பலபேர் இப்படி நக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாருவும் டென்ஷன் ஆனதில்லை. இது என்ன புதுசா ?பொழைப்பே இதுதானே? தமிழினி என்ற பெயர் அடிபட்டதும் மிகவும் காயப்பட்டு விட்டார். அதனால் இனியும் நக்குபவர்கள் தொடர்ந்து நக்குங்கள். ஆனால் அவர் டென்ஷன் ஆகாதது போல பதமாக நக்கவும்.