கோவாவுக்கு சாலைவழிப் பயணம்

மார்ச் கடைசி வாரம் கோவாவில் சந்திக்கலாம் என்று எழுதியிருந்தேன்.  நண்பர் கணபதியைத் தவிர வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை.  ஆகவே இப்போதைக்கு அராத்து, அடியேன், கணபதி ஆகிய மூவர்தான்.  இதற்கிடையே கணபதி சொன்ன ஒரு திட்டம் சுவாரசியமாக இருந்தது. ஏற்கனவே நான், அராத்து, கணபதி, செல்வா நால்வரும் மேற்கு வங்கம் வரை ஒரு சாலைப் பயணம் செல்லலாம் என்ற திட்டத்தில் இருக்கிறோம்.  அதற்கு முன்னோடிக் குறும்பயணமாக இது இருக்கலாம் என்றார் கணபதி.  அதாவது, ஹைதராபாத் வரை விமானத்தில் … Read more

சூம்பி இலக்கியம்: அராத்து

ஆண் பெண் பாலுறவு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதுதான் ஆண் ஆண் மற்றும் பெண் பெண் பாலுறவும் என்று நினைப்பவன் நான்.  அதனால்தான் என் வலது காதில் வளையம் அணிந்திருக்கிறேன்.  ஆண் ஆண், பெண் பெண் உறவில் எந்தப் பிறழ்வும் இல்லை என்று நம்புகிறேன்.  அதனால்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் bisexual என்று அறிவித்தேன். மேலும், ஒரு ஆண் அல்லது பெண் தன் ஆயுள் முழுவதும் இன்னும் ஒரே ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோதான் பாலுறவு … Read more

நண்பகல் நேரத்து மயக்கம் ஏன் ஒரு போலியான படம்?

நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இப்படித் தட்டையாக, தடாலடியாகப் போட்டுத் தாக்குவது சரியல்ல என்று ஒரு நண்பர் சொன்னார்.  இதுவே ஒரு ஐரோப்பியப் படம் என்றால் பாராட்டியிருப்பீர்கள் அல்லவா என்றும் கேட்டார்.  அப்படிப்பட்ட அந்நிய மோகம் கொண்டவன் அல்ல நான்.  இலக்கியத்தில்தான் அந்நிய மோகம் தலைவிரித்து ஆடுகிறது.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியையும் முராகாமியையும் இங்கே கொண்டாடுகிறார்கள்.  ஆனால் அவர்களை விடப் பன்மடங்கு நன்றாக எழுதும் தமிழ் எழுத்தாளனின் பெயர் சொல்லத் தயங்குகிறார்கள்.  ட்யூரின் ஹார்ஸின் பெயரைக் குறிப்பிட்டதற்கான காரணத்தைச் … Read more

கோவா சந்திப்பு

மார்ச் 23ஆம் தேதியிலிருந்து 27 காலை வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) கோவாவில் இருப்பேன். அராத்துவும் இருப்பார். எங்காவது கடல் ஓர கிராமத்தில் தங்கலாம் என்று யோசிக்கிறேன். ஹைதராபாத் சந்திப்பு பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன. நேரம் இல்லை. பல வேலைகளை ஒன்றாகப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். ஹைதாராபாதில் நிகழ்ந்த சந்தோஷங்களில் சில: நண்பர் பிரபு ராமை பதின்மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்தது. புதிய நண்பர்களான கணபதியையும், இன்பராஜையும் சந்தித்தது. கோவாவில் என்னைச் சந்திக்க … Read more

நண்பகல் நேரத்து மயக்கம்

என் நெருங்கிய நண்பர்கள் பலர் சிபாரிசு செய்ததாலும் அங்கமாலி டயரீஸ் படத்தின் இயக்குனர் என்பதாலும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் பார்த்தேன்.  குப்பை என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.  இந்தப் படத்தைப் பாராட்டுபவர்களுக்கு fake சினிமாதான் பிடிக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  இந்தப் படத்தை இயக்கியவர் மீது எனக்கு வருத்தமே இல்லை.  இதைப் பார்த்துப் பாராட்டுபவர்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.  அவர்கள் விஜய் ரசிகர்களை விட கீழான சினிமா ரசனையில் … Read more

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-lumpenism