பூச்சி 1 & 2: இரண்டு புதிய புத்தகங்கள்

மிக அலுப்புடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். இரண்டு புதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பூச்சி -1, பூச்சி-2. இரண்டுமே முழுமையான புனைவுக்கும் முழுமையான அ-புனைவுக்கும் இடையிலான புதிய வகை ஆக்கங்களைக் கொண்டவை. இரண்டையும் செப்பனிடுவதற்குப் பல நாட்களை, பல மணி நேரத்தை செலவு செய்திருக்கிறேன். ஆனாலும் நூறு பிரதிகள் விற்றால் பெரிது. இதற்கு முன் வரம் என்ற நூல் வந்தது. எத்தனை பிரதிகள் விற்றது என்று கூட நான் பதிப்பாளரிடம் கேட்கவில்லை. ஐம்பது என்று பதில் வரும். … Read more

வரங்களால் நிறைந்தவன்

ஹைதராபாதிலிருந்து திரும்பவும் கூடு அடைந்து விட்டேன்.  திரும்பவும் சாப்பாட்டுப் பிரச்சினை தொடங்கி விட்டது.  வீடு இப்போது கூட்டுக் குடும்பமாகி இருக்கிறது. எட்டு மாசப் பொடிப்பயல் வேதா, என் மகன் கார்த்திக், மருமகள் அனு, அவந்திகா, செவிலி நிர்மலா.  கார்த்திக்கும் அனுவும் எங்கள் குடியிருப்பின் நேர் மேலே உள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.  பொடியன் எங்களுடன் இருப்பதால் நிர்மலாவும் எங்களுடனேதான்.  இது தவிர மேல் வீட்டை சுத்தம் செய்ய ஒரு பணிப்பெண்.  எங்கள் வீட்டை சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் … Read more

எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedhitha-interview-by-samas-writings

ஒரு நாள்

காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்வேன்.  படுக்கையில் அமர்ந்தபடியே சில மந்திரங்களைக் கேட்பேன்.  பிறகு சில நிமிடங்கள் ப்ரம்மரி பிராணாயாமம் செய்து விட்டு வந்து பல் துலக்கி விட்டு கையோடு ஒரு கஷாயம் குடிப்பேன்.   சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருப்பதற்கான கஷாயம்.  உடனடியாக பூனைகளுக்கு உணவு கலந்து கொடுப்பேன்.  அடுத்து, பூனைகளின் மல ஜலம் சுத்தம் செய்வேன்.  அதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகும்.  நாலரை ஆகி இருக்கும்.  பிறகு சௌந்தர் கற்பித்த யோகா … Read more