ஆஜ் கி ராத்

என் ஜென்ரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்வதற்காக அவ்வப்போது ரீல்ஸ் பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக நடனம் மற்றும் விதவிதமான மீன் சமையல் முறைகளில்தான் என் ஜென்ரல் நாலட்ஜ் நேரம் போகும். அதில் இன்னும் என்னை enlighten பண்ணுவதற்காக மேலும் சில ரீல்ஸை அனுப்பி ஆட்கொள்வார் நண்பர் பிரபு கங்காதரன். அவரும் என்னைப் போல் ஜென்ரல் நாலட்ஜுக்காக ரீல்ஸில் நேரம் செலவழிப்பவர் என்பது என் யூகம். இன்று அதில் ஒரு வித்தியாசமான நடனக்காரனைப் பார்த்தேன். ஏதோ சினிமா நடிகர் போல் … Read more

மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களை அதிகம் படிக்காதீர்கள். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாவிட்டாலும் தத்தித் தத்தியாவது ஆங்கிலத்திலேயே படித்து விடுவது நலம். சமீபத்தில் தெ வெஜிடேரியன் என்ற நாவலை தமிழில் கைமா பண்ணி வைத்தது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். what the hell என்ற ஆங்கிலப் பதத்தை என்ன நரகம் இது என்று மொழிபெயர்த்திருக்கிறார் திருவாளர் முழிபெயர்ப்பாளர். இதை விட பெரிய காமெடியையெல்லாம் நான் எடுத்துப் போட்டு தொங்கவிட்டிருக்கிறேன். ஆனாலும் முழிபெயர்ப்பாளர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். … Read more

பெங்களூரு இலக்கிய விழா

பெங்களூரில் ஆட்டா கலாட்டா என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது ஆண்டு தோறும் இந்திய அளவில் எழுதப்படும் நூல்களுக்குப் பல பிரிவுகளில் விருது வழங்குகிறது. அதில்தான் 2024க்கான மொழிபெயர்ப்பு நூல்களின் நெடும்பட்டியலில் நான் எழுதிய ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Conversations with Aurangzeb: A Novel) இடம் பெற்றிருக்கிறது. விருது வழங்குவதோடு அல்லாமல் ஆட்டா கலாட்டா பெங்களூரில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய விழாவையும் நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். … Read more

அப்பா: உலகச் சிறுகதைகள்: ரிஷான் ஷெரீப்

என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார். நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று … Read more

சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

க்ராஸ்வேர்ட் விருது – மின்னம்பலம்

க்ராஸ்வேர்ட் விருது குறித்து மின்னம்பலம் இணையதளத்தில் வந்துள்ள குறிப்பு கீழே: https://minnambalam.com/cinema/writer-charu-niveditha-on-his-aurangazeb-novel/ வாக்கு அளிப்பதற்கான லிங்க்: https://www.crossword.in/pages/crossword-book-awards எப்படி வாக்களிப்பது? இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும். https://www.crossword.in/pages/crossword-book-awards பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை அதற்கான இடத்தில் … Read more