நாளை மதியம் ஒரு நேர்காணல்
நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே: https://www.swellcast.com/charu_nivedita
நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே: https://www.swellcast.com/charu_nivedita
தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி நேற்று ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அந்த உரையாடல் வரும் இருபத்தெட்டாம் … Read more
நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் நண்பர் … Read more
இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது. இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை … Read more
Conversations with Aurangzeb நாவலுக்கு insta-வில் Shreeya எழுதிய மதிப்புரை கீழே. https://www.instagram.com/p/C3mDA-irKhJ/?igsh=MTc4MmM1YmI2Ng== படத்தின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.
கோழிக்கோடு இலக்கிய விழாவில் Conversations with Aurangzeb நாவல் குறித்து சாருவும் ஷியாஸ் முகம்மதுவும் கலந்துரையாடும் விடீயோவின் இணைப்பு கீழே: