புதுமைப்பித்தன்: காலனும் கிழவியும்

வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி … Read more

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி பற்றிக் கருத்து கூறுபவர்கள் பெரும்பாலும் மனுவைப் படித்தது இல்லை. ஒரு வார்த்தை கூட. நான் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் சரி தானா என்றும் சம்ஸ்கிருதத்தோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் வசதிக்கேற்ப தகிடுதித்தங்கள் செய்வதுண்டு. இப்போது மனு ஸ்மிருதி பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது எல்லாமே ஒரு கேளிக்கை. இலக்கிய வாசிப்பே இல்லாத ஒரு கூட்டத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதும்தான். … Read more

பகவான் கிருஷ்ணரும் பரமசிவனும் (ஒரு குட்டிக் கதை)

அது ஏன் கிருஷ்ணருக்கு ர் விகுதி, அடுத்ததுக்கு ன் விகுதி, ஏன் பெயர்களில் கூட இந்தப் பாகுபாடு என்ற ஐயம் உங்களுக்கு எழலாம்.  பரமசிவனும் கிருஷ்ணரும் இரண்டு அவதாரங்கள்.  நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தாலும் இந்த அவதார விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க சாத்தியம் இல்லை.  அப்படிப்பட்ட ஆட்களெல்லாம் விவேகானந்தரோடு முடிந்து போய் விட்டார்கள்.  ஆனால் நான் அவதாரத்தை நம்புகிறேன்.  பரமசிவன் சாட்சாத் பரமசிவனின் அவதாரம்.  கிருஷ்ணர் சாட்சாத் கிருஷ்ணரின் அவதாரம்.  கிருஷ்ணரைப் பற்றி எனக்கு … Read more

இன்னொரு அதிமுக்கியமான கதை

புதுமைப்பித்தன் எழுதிய இன்னொரு அதிமுக்கியமான கதை பிரம்மராக்ஷஸ் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.      அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல் – ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது – இன்றுவரை, … Read more

புதுமைப்பித்தனின் கபாடபுரம்

புதுமைப்பித்தனின் சில முக்கியமான கதைகளை நம் தளத்தில் கொடுத்து வருகிறேன். ஆனால் எந்த எதிர்வினையும் இல்லை. தொடர்ந்து கொடுக்கவா, நிறுத்தி விடவா? பின்வரும் லிங்கில் புதுமைப்பித்தனின் பல கதைகள் உள்ளன. அதில் கபாடபுரமும் உள்ளது. புதுமைப்பித்தன் அதை 75 ஆண்டுகள் முந்தி எழுதி விட்டார். இன்று எழுதியிருந்தால் அது மிகப் பெரிய உலக சாதனை. 75 ஆண்டு முந்தி விட்டதால் இன்றைய வாசகர்களுக்குத் தெரியாமலே போய் விட்டது. என்றாலும் எழுத்தாளர்கள் அனைவரும் படித்திருக்கிறார்கள். பலர் அது பற்றி … Read more