பூச்சி – 16

நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை.  வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே.  ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது.  இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம்.  அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா?  என்னைப் பொறுத்த வரை … Read more

அரூ- மின்னிதழ்

அரூ என்ற பெயரில் வெளிவரும் இணைய சஞ்சிகையின் ஏழாவது இதழ் இத்துடன். இதில் கடவுளுடன் ஒரு சுற்றுலா என்ற என்னுடைய ஒரு கட்டுரையும் உண்டு. இது கட்டுரையாக எழுதியது அல்ல. அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைகளின் நடுவராக இருந்து நான் தேர்ந்தெடுத்த கதைகளுக்கு எழுதிய முன்னுரை. போட்டிக்கு வந்த கதைகள் 98. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 15. என்னுடைய முன்னுரை அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அரூ ஆசிரியர் குழு நண்பர்கள் … Read more

பூச்சி – 15

மோடி மஸ்தான் வேலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?  அது ஒரு எழுத்தாளனையும் பாதித்து விட்டது.  இல்லாவிட்டால் பாருங்களேன், ப்ளாட்ஃபார்ம் படத்தில் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது ஒரு நாவல்.  அதுவும் எப்படிப்பட்ட நாவல், அதைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நாவல் உலகிலேயே இலை.  செர்வாந்தேஸ் எழுதிய தோன் கெஹோத்தே (Don Quixote).  அதைப் போய் மறந்து விட்டு, அவன் கையில் வைத்திருந்தது மெழுகுவர்த்தி என்று எழுதியிருக்கிறேன்.  மோடி வித்தையின் பலம் புரிகிறதா?  இதைத்தான் மஸ்தான் சாதிக்க நினைக்கிறார்.  சாதித்தும் … Read more

ஒரு முக்கியத் திருத்தம்

பூச்சி – 14இல் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது மெழுகுவர்த்தி அல்ல. தோன் கெஹோத்தே (Don Quixote) நாவல். பாருங்கள், மோடியின் மெழுகுவர்த்தி என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுகிறது என்று. புத்தகம் – அதுவும் என்ன மாதிரி ஒரு புத்தகம் – மெழுகுவர்த்தியாக மாறி விட்டது என்றால், இது நிச்சயம் மஸ்தான் வேலை.

பூச்சி – 14

இல்லை, இன்னமுமே பதில் சொல்லி முடித்து விட்டதாகத் தோன்ற மாட்டேன் என்கிறது.  ஏனென்றால், இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை.  ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.  நேற்று நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் மொத்த வார்த்தைகள் 4267.   இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இன்னும் நாலாயிரம் வார்த்தைகளை எழுதியிருப்பேன்.  இத்தனை வார்த்தைகளை எந்தச் … Read more