சத்திய சோதனை – 1

ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன.  என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை.  அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை.  அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது.  அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. மோ.க. காந்தி சத்திய சோதனைக்கு எழுதிய முன்னுரையில். சபர்மதி ஆசிரமம். 26 நவம்பர் 1925

கெட்ட பய, அராத்து! by அராத்து

கெட்ட பய, அராத்து ! சாருவின் மனைவி அவந்திகாவுக்கு என்னை பிடிக்காது என்று சாரு நேற்று எழுதி இருந்தார். ஆஹா இது ஒரு நல்ல மேட்டர் ஆச்சே , இதைப்பத்தி நாமும் ஒரு சின்ன கட்டுரை எழுதி விடலாம் என்று தோன்றியது. அவந்திகாவுக்கு மட்டும் அல்ல , என்னுடைய எந்த நண்பரின் மனைவிக்கும் என்னை பிடிக்காது. அதோடு விஷயம் முடிவதில்லை. என்னுடைய எந்த தோழியின் கணவருக்கும் என்னை பிடிக்காது. என்னுடன் பழகக்கூடாது என்று கடுமையாக எச்சரிப்பார்கள். இதற்கே … Read more

இரண்டு பரமாத்மாக்கள்

நேற்று நடந்த என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி ஒரு இதழில் விரிவாக எழுத இருப்பதால் இப்போது இங்கே எழுதவில்லை.  மற்றபடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  உங்கள் அன்புக்கு பதிலாக என்னால் செய்யக் கூடியது இன்னும் அதிகமாகவும் இன்னும் சிறப்பாகவும் எழுதுவதுதான்.  அதைச் செய்வேன். இங்கே நேற்று நடந்த ஒரு வேடிக்கைச் சம்பவம் பற்றி.  டாக்டர் ஸ்ரீராம் எனக்கு செய்து வரும் உதவிகள் பற்றி, பணிகள் பற்றி நான் அவ்வப்போது எழுதி … Read more