நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் … Read more

ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள். இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை … Read more