அராத்து பற்றி

எனக்கு ஒரு ராசி இருக்கிறது.  எனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கிறதோ அவருக்கு என்னைப் பிடிக்காது.  உ-ம்.  சுஜாதா, அசோகமித்திரன்.  அதேபோல் என்னை விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளரை எனக்குப் பிடிக்காது.  உ-ம். உ.த.எ. என்னது, உ.த.எ.வா என்று கேட்காதீர்கள்.  அவருக்குப் பிடிக்காதது போல் பாவனை செய்வார்.  அவ்வளவுதான்.  முதல்முதலாக தருணுக்கு என்னைப் பிடிக்க, அவர் எழுத்து என்னை இழுத்துக் கொண்டு போக என்று ஆனது.  Mario Vargas Llosa-வுக்கு அடுத்தபடியாக நான் விழுந்து விழுந்து படிக்கிறேன் என்றால் … Read more

பரவசம்

பரவசத்தைக் கடந்து சென்று விடாமல் பரவசத்திலேயே ஆழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?  போகத்தில் ஆர்கஸத்தைத் தாண்டி விடாமல் அதை நீட்டித்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு கணத்தில் அது நிகழும்… அதன் இசை உதாரணம் இது: http://www.youtube.com/watch?v=7oEHNa-_C6U

உன்னதத் தருணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் இன்று போன் செய்து பேசினார்.  என்ன பேசினார் என்று செப்டம்பர் மாதம் எழுதுவேன்.  அதுதான் சரியான நேரமாக இருக்கும்.  ஆனால் அவர் பேசி முடித்ததும் மிகுந்த உவகையும் சந்தோஷமும் ஏற்பட்டது.  என் மனம் எப்போதுமே ஒரு ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கும்.   என்னோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு அது தெரியும்.  மற்றவர்கள் – அதிலும் குறிப்பாக பெண்கள் குறிப்பிடும் mood swing என்பதே என்னிடம் இல்லை.  இருந்தாலும் இன்று எஸ்.ரா. பேசிய போது … Read more

ரௌத்ரம் பழகு…

ஒரு மனிதர் என்னை அவன் இவன் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டுத் திட்டிய போது அதை சிரித்துக் கொண்டே புறந்தள்ளி விட்டேன் என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கவனித்திருப்பீர்கள்.  ஆனால் என்னுடைய அமைதி பலகீனம் அல்ல. மகாத்மா காந்தி அடிக்கடி சொல்வார் அல்லவா, அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல என்று.  அதைப் போல்தான் அமைதியும். என் எழுத்தைப் படித்தவர்களுக்கும் என்னோடு பழகியவர்களுக்கும் தெரியும், என்னைப் பாராட்டினால் பதிலுக்கு அவர்களைப் பாராட்ட மாட்டேன் என்று.  பாராட்டத் தகுதி … Read more