சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ : ஒரு மதிப்புரை

  அய்யா சரவணன் சந்திரன் அவர்களே…ரோலக்ஸ் வாட்ச் கொலைக்குத்து அய்யா…நாவல் படிக்கும்போது எப்படித் தெரியுமா இருந்தது….? இப்படித்தான்… https://www.youtube.com/watch?v=nYSDC3cHoZs Metallica Band-ன் தீவிர ரசிகன் நான் என்கிற வகையில் அவர்களின் இசை வடிவத்தில் இருக்கும் ஒரு உக்கிரமான வெறித்தனத்தை உங்கள் “ரோலக்ஸ் வாட்ச்”-சில் பக்கத்துக்குப் பக்கம் இம்மி பிசகாமல் உணர முடிகிறது. இப்படியா நாவல் முழுக்க விறுவிறுப்பாக எழுதி வைப்பது. நடுநடுவில் மருந்துக்காவது கொஞ்சம் தொய்வு ஏற்படுத்தியிருக்க வேண்டாமா…? என்ன போங்க… Visual Language பயங்கரமாக இருக்கிறது. … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

புதிய தலைமுறை இதழில் ஆறு மாத காலம் எழுதிய பத்தியின் தொகுப்பு வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்.   சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் ஒரு அறிஞர் உம்பர்த்தோ எக்கோ பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார்.  ஃபாஸிஸம் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதில் உண்டு.  ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை எழுதிய அறிஞர் தன் வாழ்வில் ஒரு ஃபாஸிஸ்டாகவே நடந்து கொள்வார்.  அதுதான் என் அனுபவம்.  1980-இல் தில்லியில் ஒருநாள் மாலை … Read more

ஜார்ஜ் ஜோஸஃப்

அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் பட்ட அவஸ்தை அவனைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அடிமை வியாபாரத்தை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கன் என்ன பாடுபட்டு, அதுக்காகத் தன் உயிரையும் கொடுத்ததை அவன் படித்திருந்தான்.’ நாவலில் இந்த இடம் 1928-ம் ஆண்டின் நடப்புகளை விவரிக்கிறது. … Read more

ஹூசுனின் உக்கிரம்

ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம்.  பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு.  உருதுவில் ’கஜல்’ என்று அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’.  ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.  Fuzûlî (1483 –1556) Bâkî  (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும் (ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு … Read more

ஆன்மீகம் என்ன கெட்ட வார்த்தையா?

அன்புள்ள சாரு, சமீபகாலமாக உங்கள் எழுத்து ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்துவருவதாக சில வாசகர்கள் கவலை தெரிவித்து வருவதை கவனிக்கிறேன். பெப்ரவரியில் நடைபெற்ற தங்களது புத்தக வெளியீட்டு விழாவில் கூட யாரோ அந்த விஷயத்தை தொட்டது ஞாபகம் வருகிறது. அவ்வாறு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அதை derogatory தொனியில் சொல்வது போல் படுகிறது. ஆன்மீகம் என்ன தீண்டத்தகாத விஷயமா? அதை நீங்கள் எழுதுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது ஆன்மீகம் உங்கள் எழுத்தின் வீரியத்தை குறைக்கிறது என்று சொல்ல முற்படுகிறார்களா? உங்கள் “ராஸ லீலா” … Read more

அறம் பொருள் இன்பம்

கடந்த ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அடியேனின் ஏழு புத்தக வெளியீட்டுக்கு இலக்கிய உலகில் வரலாறு காணாத கூட்டம் வந்தது.  இவ்வளவுக்கும் அன்றைய தினம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப் போட்டி, இளையராஜாவின் 1000 பட விழா நடந்தது.  அதையும் மீறித்தான் ராஜா அண்ணாமலை மன்றம் நிறைந்தது.  அதன் கொள்ளளவு 800.  வந்திருந்த பார்வையாளர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள்.  இந்த மன்றம் பலமுறை ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கிறது.  ஆனால் என்றுமே இந்த அளவு … Read more